TA/Prabhupada 0831 - நாம் சாது மார்க்கத்தை பின்பற்றவேண்டும் - அசாது மார்க்கத்தை அல்ல

Revision as of 04:51, 4 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0831 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


The Nectar of Devotion -- Vrndavana, November 13, 1972

பிரதியும்னா: "இப்போது இந்த சாதனா-பக்தி, அல்லது பக்தி சேவையின் நடைமுறையை, இரண்டு பகுதிகளாகவும் பிரிக்கலாம். முதல் பகுதி ஒழுங்குமுறைக் கொள்கைகள் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக குருவின் ஒழுங்கு அல்லது அதிகாரப்பூர்வ வேதங்களின் பலத்தின் அடிப்படையில் ஒருவர் இந்த மாறுபட்ட ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்."

பிரபுபாதர்: ஆம். ஒழுங்குமுறைக் கொள்கைகள் என்றால் நீங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்பதாகும். ஒழுங்குமுறை கொள்கை என்பது அங்கீகரிக்கப்பட்டதாகும் - அவை அங்கீகரிக்கப்பட்ட வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அது ஆன்மீக குருவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் நமக்குத் தெரியாது. ஆன்மீக குருவால் அது உறுதிப்படுத்தப்படும்போது, ​​ஆம், அது சரிதான். சாது குரு, சாது-சாஸ்த்ர-குரு-வாக்ய, திநேதே கரியா ஐக்ய. நரோத்தம தாஸ டாகுரவின் அதே அறிக்கை. ஸாது பின்பற்றப்படும் கொள்கைகள். ஸாது-மார்க-அனுகமனம். நாம் பின்பற்ற முடியாதது அஸாது-மார்க. நாம் பின்பற்ற வேண்டியது ஸாது-மார்க. மஹாஜனோ யேன கத: ஸ பந்தா: (சை.ச மத்ய 17.186). நாம் தயாரிக்கப்பட்ட ஏதாவது பாடல்களை பின்பற்ற முடியாது, ஏதாவது தயாரிக்கப்பட்ட யோசனைகளை பின்பற்ற முடியாது. அதை நாம் பின்பற்ற முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பாடல் என்ன, நாம் அதை பாடுவோம். அங்கீகரிக்கப்பட்ட முறை என்ன, நாம் அதை பின்பற்றுவோம். சாது மற்றும் குரு என்பது சாஸ்திரத்தின் அடிப்படையில். சாஸ்திரம் என்றால் சாது மற்றும் குருவின் கூற்றுகள். எனவே சாது மற்றும் குரு மற்றும் சாஸ்திரம், அவை ஒரே மாதிரியானவை. எனவே அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். யாரோ ஒருவரின் சாது சாஸ்திரத்திற்கு எதிராக பேசுகிறார் என்றால், அவர் சாது அல்ல. யாரோ ஒரு குரு சாஸ்திரத்திற்கு எதிராகப் போகிறார் என்றால், அவர் குரு அல்ல. மற்றும் சாஸ்திரம் என்றால் அசல் குரு மற்றும் சாது என்று பொருள். சாஸ்திரம் என்றால் என்ன? ஸ்ரீமத்-பாகவதத்தில் உள்ளதைப் போல. ஸ்ரீமத்-பாகவதம் என்றால் அசல் சாது மற்றும் குருவின் தன்மையை நாங்கள் படித்து வருகிறோம். ப்ரஹ்லாத மஹாராஜ, ப்ரஹ்லாத-சரித்ர, த்ருவ-சரித்ர, அம்பரீஷ-சரித்ர, பாண்டவர்கள், பீஷ்மர் ஆகியவர்களை போல. எனவே பாகவத என்றால் பகவான் மற்றும் பக, பக்தர்களின் மகிமை. அவ்வளவுதான். இது பாகவதம். ஸாது-குரு-ஷாஸ்த்ர-வாக்ய, திநேதே கரியா ஐக்ய எனவே

இது ஸாதன-பக்தி. ஆன்மீக குருவிடமிருந்து நாம் அறிவுறுத்தலைப் பெற வேண்டும். ஆதௌ குர்வாஷ்ரயம், ஸத்-தர்ம-ப்ருச்சாத் .ஆன்மீக குரு யாருக்குத் தேவை? ஸத்-தர்மத்தினை பற்றி விசாரிக்கும் ஒருவர் அஸத்-தர்மத்தினை பற்றி அல்ல. ஸத்-தர்ம-ப்ருச்சாத். தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (ஸ்ரீ.பா 11.3.21). ஆழ்நிலை விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு மனிதனுக்கு ஆன்மீக குரு தேவை. ஒரு ஆன்மீக குருவை.... ஏற்றுக்கொள்வது ஒரு நவ நாகரீக விஷயம் என்பத்திற்காக அல்ல. நாம் ஒரு நாய் வைத்துக்கொள்வதை போல, ஒரு ஆன்மீக குருவை, செல்ல ஆன்மீக குருவாக வைத்து கொள்வது, என் பாவச் செயல்களுக்கு அனுமதி பெறும் நோக்கத்தோடு செய்வது ஆன்மீக குருவை ஏற்றுக் கொள்ளாதது ஆகும். ஆன்மீக குரு என்றால் தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்நேன ஸேவயா (ப.கீ 4.34). முழுமையாக சரணடைய முடியும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு ஆன்மீக குருவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவருக்கு உங்கள் சேவையை வழங்குங்கள். அது ஆன்மீக குரு. ஸாது-மார்க-அனுகமனம். ஸத்-தர்ம-ப்ருச்சாத். ஆகவே ஆழ்நிலை விஷயத்தில் ஆர்வமுள்ள ஒருவருக்கு ஆன்மீக குரு தேவை. தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்நேன ஸேவயா. தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (மு.உ.1.2.12). தத்-விஜ்ஞான விஜ்ஞான, ஆன்மீக வாழ்க்கையின் அறிவியல். ஆன்மீக வாழ்க்கையின் அறிவியலில் ஆர்வத்தினால் ஒருவர், ஆன்மீக குருவை பெறலாம். அதை ஒரு நாகரீகமாக வைத்திருப்பது அல்ல. இல்லை. ஒருவர் தீவிரமாக இருக்க வேண்டும். தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (ஸ்ரீ.பா 11.3.21). முதலாவதாக, அவர் எந்த விஷயத்தில் அறிந்து கொள்ள ஆர்வம் கொள்கிறார், பௌதிக விஷயங்களிலா அல்லது ஆன்மீக விஷயங்களிலா. ஒருவர் இதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் உண்மையில் ஆன்மீக விஷயத்தில் ஆர்வமாக இருந்தால், அவர் சரியான, நேர்மையான ஆன்மீக குருவைத் தேட வேண்டும். குரும் ஏவ அபிகச்சேத். கண்டுபிடிக்க வேண்டும். இது விருப்பமல்ல. கண்டிப்பாக செய்ய வேண்டும். கட்டாயம், நீங்கள் அதை தவிர்க்க முடியாது. ஆன்மீக குரு இல்லாமல், நீங்கள் ஒரு படி மேலே செல்ல முடியாது.