TA/Prabhupada 0846 - பௌதிக உலகமானது ஆன்மிக உலகின் நிழல் பிரதிபலிப்பாகும்

Revision as of 14:26, 25 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0846 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


741221 - Lecture SB 03.26.09 - Bombay

நிதாய்: "தேவஹூதி கூறினார்: ஓ புருஷோத்தமரே, புருஷோத்தமரின் பண்புகள் மற்றும் அவரது ஆற்றல்களை தயவுசெய்து விளக்குங்கள், ஏனெனில் இவை இரண்டும்தான் தோன்றிய மற்றும் தோன்றாத படைப்பின் காரணங்கள்."

பிரபுபாதர்:

ப்ரக்ருதே: புருஷஸ்யாபி
லக்ஷணம் புருஷோத்தம
ப்ரூஹி காரணயோர் அஸ்ய
ஸத்-அஸச் ச யத்-ஆத்மகம்
(SB 3.26.9).

எனவே கபிலதேவர் இங்கே புருஷோத்தமர் என்று அழைக்கப்படுகிறார். ஜீவன்கள், பரமாத்மா மற்றும் புருஷோத்தமர். உயிரினங்கள் சில நேரங்களில் புருஷர் எனப்படுகின்றன, ஏனெனில் புருஷர் என்றால் அனுபவிப்பவர். ஜீவன்கள் அனுபவிப்பாளராக இல்லாவிட்டாலும், இந்த ஜட உலகத்தை அனுபவிக்க விரும்புகின்றன. நாம் பல முறை விளக்கியுள்ளோம். ஜீவன்களும் ப்ரக்ருதியே, ஆனால் அவையும் அனுபவிக்க விரும்புகின்றன. அதுவே மாயை எனப்படுகிறது. எனவே அவற்றின் அனுபவிக்கும் மனோபாவத்தில், அவற்றை மாயையான புருஷர் எனலாம். உண்மையான புருஷர் பகவானாவார். புருஷர் என்றால் போக்தா என்று பொருள். உண்மையான போக்தா, அனுபவிப்பவர், பரம புருஷ பகவான் கிருஷ்ணர். போக்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (BG 5.29).

எனவே தேவஹூதி புருஷர் மற்றும் ப்ரக்ருதியின் பண்புகள் தெளிவுபடுத்தப்படுவதை விரும்புகிறார். எனவே புருஷர் என்பவர் ஒருவரே, ஆனால் ப்ரக்ருதி, பல சக்திகள் உள்ளன. நடைமுறை அனுபவத்தில் பார்ப்பது போல, கணவனும் மனைவியும் - மனைவி சக்தியாக இருக்க வேண்டும். கணவர் இரவு பகலாக மிகவும் கடினமாக உழைக்கிறார், ஆனால் அவர் வீட்டிற்கு வரும்போது, மனைவி அவருக்கு வசதிகள், உணவு, தூக்கம், இனச்சேர்க்கை போன்றவற்றை பல வழிகளில் தருகிறாள். அவர் புதிய ஆற்றலைப் பெறுகிறார். குறிப்பாக கருமிகள், அவர்கள் மனைவியின் நடத்தை மற்றும் சேவையால் ஆற்றலைப் பெறுகிறார்கள். இல்லையெனில் கருமிகளால் செயல்பட முடியாது. எப்படியிருந்தாலும், ஆற்றல் கொள்கை உள்ளது. இதேபோல், புருஷோத்தமரும் சக்தியைக் கொண்டுள்ளார். வேதாந்த சூத்திரத்தில், பரம புருஷ பகவான், எல்லாவற்றின் ஆதி மூலம், பிரம்மம்... அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. அந்த பிரம்மம்... ஒரு சூத்திரத்தில் வியாசதேவர் அதை விவரிக்கிறார் ஜன்மாத்யஸ்ய யத:: "அனைத்தும் பரம பூரண சத்தியத்திடமிருந்து (பிரம்மத்திடமிருந்து) வருகிறது (SB 1.1.1)." எனவே அந்த பிரம்மம், பூரண உண்மை தனது ஆற்றலை சக்திகளிடமிருந்து பெறுகிறது என்ற இந்த நியமம் இல்லாவிட்டால், இந்த கருத்து ஜட உலகில் ஏன் வருகிறது? ஜட உலகம் நிழல், ஆன்மீக உலகின் பிரதிபலிப்பு. ஆன்மீக உலகில் அசல் விஷயம் இல்லையென்றால், அது ஜட உலகில் பிரதிபலிக்கப்பட முடியாது.