TA/Prabhupada 0917 - முழு உலகமும் புலன்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது, புலன்களின் சேவகன்

Revision as of 12:14, 6 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0917 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730421 - Lecture SB 01.08.29 - Los Angeles

எனவே நீங்கள் கிருஷ்ணரை அலங்கரித்தால், நீங்களும் அலங்கரிக்க படுவீர்கள். நீங்கள் கிருஷ்ணரை திருப்திப் படுத்தினால், பிறகு நீங்களும் திருப்தி அடைவீர்கள். நீங்கள் கிருஷ்ணருக்கு நல்ல உணவுகளை படைத்து, பிறகு நீங்கள் அதனை சாப்பிடலாம். கோயிலுக்கு வெளியே இருப்பவர்கள், இது போன்ற நல்ல உணவு வகைகளை கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கிருஷ்ணருக்கு படைக்கப்பட்டிருப்பதனால், அதனை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதுதான் தத்துவம். எனவே நீங்கள் கிருஷ்ணரைத் எல்லா வகையிலும் திருப்திப்படுத்த முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்களும் எல்லாவகையிலும் திருப்தி அடைவீர்கள். இதுதான்..... கிருஷ்ணருக்கு உங்கள் சேவை அவசியமில்லை. ஆனாலும் அவர் கருணையுடன் ஏற்றுக்கொள்கிறார். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷரணம்' வ்ரஜ (ப.கீ. 18.66) "என்னிடம் நீ சரண் அடைவாயாக." என்று கிருஷ்ணர் உங்களை கேட்கிறார். அதனால் கிருஷ்ணருக்கு ஒரு சேவகன் குறைவாக இருக்கிறது என்றோ, அதனால் நீங்கள் சரணடைந்தால் அவருக்கு நன்மை என்றோ பொருளல்ல. (சிரிப்பு) கிருஷ்ணரால், கோடிக்கணக்கான சேவகர்களை தன்னுடைய விருப்பத்தின் மூலமாகவே உருவாக்கிவிட முடியும். எனவே அது விஷயமல்ல. ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள். இதுதான் உங்கள் வேலை.

கிருஷ்ணர் கூறுகிறார் : அஹம்' த்வாம்' ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (ப.கீ. 18.66). நீங்கள் இங்கே துன்பத்தில் இருக்கிறீர்கள். எந்த அடைக்கலமும் இல்லாதவனை போல. நீங்கள் தெருக்களில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இல்லாமல் அலையும் பல மனிதர்களைப் பார்க்கலாம் . நாம் கடற்கரைப் பக்கம் போகிறோம். அங்கு பல ஆண்களையும் பெண்களையும் பார்க்கலாம், எந்தக் குறிக்கோளும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் அலையும் குழப்பமுற்றவர்கள். எனவே..... ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடம் அடைக்கலம் எடுத்துக் கொண்டால், பிறகு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்: "ஒ, எனக்கு இப்போது அடைக்கலம் கிடைத்துவிட்டது." இனி எந்தக் குழப்பமும் இல்லை. எந்த நம்பிக்கையின்மையும் இல்லை. நீங்கள் இதனை நன்றாக புரிந்து கொள்ளலாம். மேலும், நான் தினமும் அவர்கள் எவ்வாறு கிருஷ்ண உணர்வில் நம்பிக்கையுடன் உள்ளார்கள் என்பது குறித்து பல கடிதங்களை பெறுகிறேன்.

எனவே கிருஷ்ணர், இங்கு அவதாரம் எடுத்து சில சேவகர்களை சேகரிப்பதற்காக வந்திருக்கிறார் என்பதல்ல, அது உண்மையல்ல. நாம் ஒப்புக் கொண்டால்...... கிருஷ்ணரின் சேவகன் ஆவதற்குப் பதிலாக, நாம் பல விஷயங்களின் சேவகனாக உள்ளோம். நாம் நம்முடைய புலன்களின், மற்றும் புலன் உணர்ச்சி செயல்களின் சேவகன். காம, க்ரோத, லோப, மோக. உண்மையில் முழு உலகமும் புலன்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது, புலன்களின் சேவகன், கோதாஸா. ஆனால் நாம் கிருஷ்ணரின் சேவையில் நமது புலன்களை ஈடுபடுத்தினால், பிறகு அதற்கு மேல் நாம் புலன்களின் சேவகனாக இருக்க மாட்டோம். நாம் புலன்களின் எஜமானர் ஆகிவிடுவோம். ஏனெனில் நாம், நாம், நாம் புலன்கள் வேறுவகையில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டோம். அந்த உறுதியை பெற்று, பிறகு நாம் பாதுகாப்பாக இருப்போம்.

எனவே இங்கே குந்திதேவி விளக்குகிறார்: "இந்த பௌதிக உலகத்தில் உங்களுடைய தோற்றம்.... தவறாக வழிநடத்துவதாக அல்ல குழப்பமடையச் செய்வதாக உள்ளது." நாம் நினைக்கிறோம், : "கிருஷ்ணருக்கு இங்கு வருவதற்கு ஏதோ ஒரு வேலை இருக்கிறது, ஒரு குறிக்கோள். எனவேதான் அவர் இங்கு அவதரிக்கிறார்." இல்லை. இது அவருடைய லீலை. இது லீலை. சில சமயம் கவர்னர் சிறைச்சாலையை ஆய்வு செய்வதற்காக செல்வதைப்போல. சிறைச்சாலைக்கு செல்வதற்கு அவருக்கு எந்த வேலையும் இல்லை. சிறை அதிகாரிகளிடம் இருந்து அவர் அறிக்கைகளை பெறுகிறார். இருந்தும் சில சமயம் அவரே வருகிறார், "அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்." இதுதான் லீலை. இது அவருடைய சுதந்திரம். அவர் சிறையில் விதிகளுக்கு கீழ் கட்டுப்பட்டு, அவர் சிறைக்கு வந்திருக்கிறார் என்பதல்ல. இல்லை. அப்படி அல்ல, ஆனால் சிறைக்கைதிகள், "ஓ, இந்த கவர்னர் கூட இங்கு ஒரு கைதி தான். எனவே நாங்கள் சமமானவர்கள். நாங்கள் சமமானவர்கள். நானும் கூட கவர்னர் தான்." என்று நினைக்கலாம். (சிரிப்பு). அந்த அயோக்கியன், "கிருஷ்ணர் வந்திருப்பதால், அவர் அவதாரம் என்பதால், நானும் கூட அவதாரம் தான்." என்று நினைக்கிறான். இந்த அயோக்கியத் தனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.