TA/Prabhupada 0935 - வாழ்வின் உண்மையான தேவை ஆத்மாவிற்கான வசதிகளை அளிப்பதுதான்

Revision as of 06:53, 7 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0935 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730425 - Lecture SB 01.08.33 - Los Angeles

இங்கு கூறப்பட்டுள்ளது என்னவென்றால்......... இப்போது நான் அந்த ஸ்லோகத்தை விளக்குகிறேன். த4ர்மஸ்ய க்லானிர் பவதி. இது தான் தர்மஸ்ய க்லானி:, கடமைகளின் களங்கம். தர்ம என்றால் கடமை. தர்ம என்றால் ஒரு வகையான நம்பிக்கை அல்ல. ஆங்கில அகராதியில், "தர்மம் என்றால் நம்பிக்கை" என்று கூறப்பட்டுள்ளது. இல்லை, இல்லை. அப்படி அல்ல. தர்ம என்றால் உண்மையான கடமை. இதுவே தர்மம் எனப்படும். உங்களுக்கு ஆத்மாவைப் பற்றி எந்த தகவலும் இல்லையென்றால், ஆத்மாவின் தேவை என்ன என்பதை நீங்கள் அறியவில்லையென்றால், வாழ்வின் உடல் தேவைகளை மட்டும், உடலின் சௌகரியங்களை மட்டும் அளிப்பதில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்களென்றால்.... அந்த உடலின் சௌகரியங்கள் உங்களை காப்பாற்றப் போவதில்லை.

ஒருவன் மிகவும் வசதியாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவன் சாக மாட்டான் என்று அர்த்தமா? அவன் இறப்பான். எனவே வெறும் உடல் சௌகரியங்களால் மட்டும் நீங்கள் நிலைத்திருக்க முடியாது. தக்கன பிழைக்கும். இருப்பிற்கான போராட்டம். நாம் உடல் தேவைகளை பற்றி மட்டும் அக்கறை கொண்டால், தர்மஸ்ய க்லானி என்று அழைக்கப்படுகிறது, களங்கப்பட்டது. உடலின் தேவை என்ன என்பதையும், ஆத்மாவின் தேவை என்ன என்பதையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் உண்மையான தேவை, ஆத்மாவிற்கான வசதிகளை அளிப்பது தான். மேலும் ஆத்மாவிற்கான வசதிகளை, பௌதிக ஏற்பாடுகளால் அளிக்க முடியாது. ஆத்மாவின் அடையாளம் வேறு என்பதால், ஆத்மாவிற்கு ஆன்மீக உணவு அளிக்கப்படவேண்டும். அந்த ஆன்மீக உணவு, கிருஷ்ண உணர்வு தான். நீங்கள் ஆத்மாவிற்கு ஆன்மிக உணவை அளித்தால்.....

உணவு, அதாவது ஒருவன் நோய்வாய் பட்டிருந்தால் அவனுக்கு பத்தியமும் மருந்தும் அளிக்க வேண்டும். இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் மருந்தை மட்டும் அளித்து, சரியான உணவை அளிக்காவிட்டால், அது வெற்றி அடையாது. இரண்டும் தேவை. எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் உணவை அதாவது, ஆத்மாவிற்கு உணவையும் மருந்தையும் அளிப்பதற்காக உள்ளது. ஹரே கிருஷ்ண மஹா-மந்திரம் தான் மருந்து. பவௌஷதாச் ச்ரோத்ர-மனோ-'பிராமாத் க உத்தமஷ்லோக-குணானுவாதாத் புமான் விரஜ்யேத வினா பஷுக்நாத் (ஸ்ரீ. பா. 10.1.4). பரீட்சித்து மகாராஜா, சுக தேவ கோஸ்வாமியிடம் கூறினார், அதாவது "நீங்கள் எனக்கு வழங்க தயாராக இருக்கும் இந்த பாகவத சொற்பொழிவு சாதாரண விஷயமல்ல." நிவ்ரு'த்த-தர்ஷைர் உபகீயமாநாத். இந்த பாகவத சொற்பொழிவுகள், நிவ்ரு'த்த-தர்ஷைர் எனப்படுபவர்களால் ரசிக்கப்படுபவை. த்ரு'ஷ்ணா, த்ரு'ஷ்ணா என்றால் வேட்கை. இந்த பௌதிக உலகத்தில் அனைவருமே வேட்கை கொண்டுள்ளனர். எனவே, யார் ஒருவர் இந்த வேட்கையில் இருந்து விடுபட்டிருக்கிறாரோ, அவரால் பாகவதத்தினை, அது எவ்வளவு சுவையாக உள்ளது என்பதை சுவைக்க முடியும். அது அப்படிப்பட்டது. நிவ்ரு'த்த-தர்ஷை:... அதைப்போலவே பாகவதம் என்றால் ஹரே கிருஷ்ணா மந்திரமும் கூட பாகவதம் தான். பாகவதம் என்றால் பரமபுருஷ பகவானுடன் தொடர்புடைய எதுவுமே பாகவதம் தான். அதுவே பாகவதம் என்று அழைக்கப்படுகிறது. உன்னத பரமன், பகவான் என்று அழைக்கப்படுகிறார். பாகவத-ஷப்த, அவருடன் தொடர்புடைய எதுவுமே பாகவத-ஷப்த, பாகவத-ஷப்த ஆக மாற்றம் பெறுகிறது.

எனவே பரிஷித் மகாராஜா, பாகவதத்தின் சுவையை பௌதிக வேட்டையிலிருந்து விடுபட்டவர்கள் தான் உணர முடியும் என்று கூறினார். நிவ்ரு'த்த-தர்ஷைர் உபகீயமாநாத். மேலும் என்ன, எதற்காக இது சுவைக்கப்பட வேண்டும்? பவௌஷதி. பவௌஷதி, என்றால் நமது பிறப்பு இறப்பு என்னும் நோய்க்கான மருந்து. பவ என்றால் "ஆவது."