TA/Prabhupada 0944 - கிருஷ்ணர் செய்துள்ள ஏற்பாட்டின் நன்மைகளை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0943 - Nothing Belongs to me. Isavasyam idam sarvam, Everything Belongs to Krsna|0943|Prabhupada 0945 - Bhagavata-dharma Means the Relationship Between the Devotees and the Lord|0945}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0943 - எதுவும் எனக்கு சொந்தமானது அல்ல. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் , எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமு|0943|TA/Prabhupada 0945 - பகவத-தர்ம என்பது பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது|0945}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:27, 16 August 2021



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

நமது தேவை, நமது உடல் தேவைகளை பொறுத்தவரை - சாப்பிடுவது, தூங்குவது மற்றும் இனச்சேர்க்கை மற்றும் பாதுகாத்தல் - அது அவருடைய வாழ்க்கைக்கு ஏற்ப அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தாழ்ந்த உயிரினங்களில் எல்லாம் இருக்கிறது என்பதை அவைகளால் புரிந்து கொள்ள முடியாது, ஏற்பாடு, அவைகள் அறிந்திருந்தாலும், ஒரு பறவை போல.... அதிகாலையில் ஒரு பறவை எழுகிறது, அதற்கு உணவு இருக்கிறது என்பது தெரியும். அதற்கு தெரியும். ஆனால் இன்னும் அது உணவைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருக்கிறது. எனவே சிறு வேலை, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு கொஞ்சம் பறப்பது, அது ... அது மிகப்பெரிய பழங்களைப் பார்க்கிறது, சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, அவை சாப்பிடக்கூடிய பல பழங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து உயிரினங்களுக்கும், உணவு, பானம் ஆகியவற்றிற்கான ஏற்பாடு உள்ளது. சாப்பிடுவது, தூங்குவது, இனச்சேர்க்கை மற்றும் பாதுகாத்தல், இவைகளுக்கு ஏற்பாடு உள்ளது. ஆப்பிரிக்காவில் கூட பழங்களை உற்பத்தி செய்யும் சில மரங்கள் உள்ளன; அந்த பழங்கள் இரும்பு தோட்டாவை விட கடினமானவை. ஆனால் இந்த பழங்களை கொரில்லாக்கள் தின்கின்றன. நாம் சில கொட்டைகளை மென்று சாப்பிடுவது போல அவை அந்த பழங்களை சேகரிக்கின்றன, எனவே அவை அந்த கொட்டைகளை மென்று சாப்பிடுவதையும் அனுபவிக்கின்றன. ஆனால் அது மிகவும் கடினமானது. நான் ஏதோ புத்தகத்தில் படித்தேன், எனவே உங்களுக்கும் தெரியும், கொரில்லாக்கள் வசிக்கும் வனத்தின் கால்வாசி காட்டுப்பகுதியில், கடவுள் அவைகளுக்கு பழம் தருகிறார்: "ஆம், இதோ உங்கள் உணவு."

எனவே எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறை இல்லை. நாம் அறியாமை காரணமாக, பற்றாக்குறையை உருவாக்கியுள்ளோம். இல்லையெனில், பற்றாக்குறை இல்லை. பூர்ணம் இதம். எனவே (ஈஷோபனிஷத்) சொல்கிறது பூர்ணம். எல்லாம் முழுமையாக உள்ளது. நமக்கு தண்ணீர் தேவைப்படுவதுப் போலவே, தண்ணீரை மிகவும் விரும்புகிறோம். இந்த சமுத்திரங்களை கடவுள் எவ்வாறு படைத்தார் என்பதைப் பாருங்கள். நீங்கள் எடுக்கலாம் ... நாம் பயன்படுத்தும் தண்ணீர் எல்லாம் கடலில் இருந்து தான். இருப்பு உள்ளது. அது வெறுமனே அந்த இருப்பிலிருந்து விநியோகிக்கப்படுகிறது. இயற்கையின் ஏற்பாடு, கடவுள், கடவுளின் ஏற்பாடு, இது சூரிய ஒளியால் ஆவியாகும். இது ஆவியாகி, அது வாயுக்கள், மேகம் ஆகிறது. தண்ணீர் அங்கே இருக்கிறது. மற்ற ஏற்பாடுகளால் இந்த நீர் நிலமேற்பரப்பு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது, அது உங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்காக மலையின் உச்சியில் வீசப்படுகிறது. நதி கீழே வருகிறது. மொத்தமாக, ஆண்டு முழுவதும் நீர் வழங்கல் உள்ளது. இந்த வழியில், நீங்கள் முழு சூழ்நிலையையும் படித்தால், இறைவனின் படைப்பு, எல்லாம் முழுமையானது, சரியானது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதுதான் தத்துவம். எல்லாம் முழுமையானது. எந்த அவசியமும் இல்லை. நம் ஒரே தேவை என்னவென்றால், கிருஷ்ணரின் ஏற்பாட்டை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.