TA/Prabhupada 0945 - பகவத-தர்ம என்பது பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது

Revision as of 07:27, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720831 - Lecture - New Vrindaban, USA

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நீங்கள் அன்பாக பங்கேற்றதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே ஸ்ரீமன் கீர்தனானந்த மஹாராஜ விவரித்தபடி, இந்த பாகவத தர்மம் பகவானால் பேசப்பட்டது. இறைவன் ஸ்ரீ க்ருஷ்ண பக-வான். இது ஒரு சமஸ்கிருத சொல். பக என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள், மற்றும் வான் என்றால் வைத்திருப்பவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களும் ஒன்றிணைந்து பகவான் என்ற வார்த்தை உருவாகிறது அதாவது நித்திய அதிர்ஷ்டசாலி. யாரோ ஒருவர் மிகவும் பணக்காரராக இருந்தால், யாரோ ஒருவர் மிகவும் வலிமையாக இருந்தால், நம் செல்வத்தை கணக்கிடுகிறோம், யாரோ ஒருவர் மிகவும் அழகாக இருந்தால், யாராவது மிகவும் புத்திசாலி என்றால், யாரோ ஒருவர் வாழ்க்கை துறந்த நிலையில் இருந்தால். இது போல, ஆறு செழிப்புகள் உள்ளன, இந்த செழிப்புகள், ஒருவர் முழுமையாய் பெற்றிருக்கும் பொது, எந்த போட்டியும் இல்லாமல், அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார். எல்லோரையும் விட பணக்காரர், எல்லோரையும் விட புத்திசாலி, எல்லோரையும் விட அழகானவர், எல்லோரையும் விட பிரபலமானவர், மிகவும் துறந்தவர் - இவ்வாறாக, பகவான். மேலும் பாகவத என்பது பக என்ற வார்த்தையிலிருந்தும் வருகிறது. பகவிலிருந்து, இது ஒரு பங்கேற்பு நோக்கத்தைப் பயன்படுத்தும்போது, ​​அது பாக என்று மாறுகிறது. எனவே பாகவத. அதே விஷயம், வான், இந்த வார்த்தை வத், வத்-ஷப்த. என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பாகவத. சமஸ்கிருதத்தில், ஒவ்வொரு வார்த்தையும் இலக்கணப்படி மிகவும் முறையாக பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையும். எனவே இது சமஸ்கிருத மொழி என்று அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதம் என்றால் சீர்திருத்தம் என்று பொருள். நம்மால் விருப்பப்படி தயாரிக்க முடியாது; இது இலக்கண விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எனவே பாகவத தர்மம் என்றால் பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு. இறைவன் பகவான் மற்றும் பக்தன் பாகவத, அதாவது பகவானுடன் உறவு கொண்டவர். எனவே எல்லோரும் கடவுளின் உயர்ந்த ஆளுமையுடன் தொடர்புடையவர்கள், தந்தை மற்றும் மகன் எப்போதும் தொடர்புடையது போல. அந்த உறவை எந்த நிலையிலும் உடைக்க முடியாது, ஆனால் சில நேரங்களில் மகன் தனது சொந்த சுதந்திரத்தின் காரணமாக, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தந்தையுடனான பாச உறவை மறந்து விடுகிறார். உங்கள் நாட்டில், இது மிகவும் அசாதாரணமான விஷயம் அல்ல. பல மகன்கள் தந்தையின் பாசமுள்ள வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். அது மிகவும் சாதாரண அனுபவம். எனவே அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதேபோல், நாம் அனைவரும் கடவுளின் மகன்கள், ஆனால் நாம் அதே நேரத்தில் சுதந்திரமாக இருக்கிறோம். முழுமையாக சுதந்திரமாக இல்லை, ஆனால் சுதந்திரமாக. சுதந்திரம் பெறும் போக்கு நமக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால், கடவுள் முற்றிலும் சுதந்திரமானவர், நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள், எனவே, நமக்கு சுதந்திரத்தின் பண்பு கிடைத்துள்ளது. நாம் கடவுளைப் போல் முற்றிலும் சுதந்திரமாக இருக்க முடியாது என்றாலும், "நான் சுதந்திரமாக வேண்டும்" என்ற போக்கு உள்ளது. ஆகவே, உயிரினங்களாகிய நாம் - கடவுளின் அங்க உறுப்புக்கள் - நாம் கடவுளிடமிருந்து சுதந்திரமாக வாழ விரும்பும்போது, ​​அதுவே நமது நிபந்தனை நிலை.