TA/Prabhupada 0946 - மாயையான மகிழ்ச்சி என்று அழைக்கப்படும் ஒன்றிற்காக ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு

Revision as of 07:27, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720831 - Lecture - New Vrindaban, USA

நிபந்தனை நிலை என்பது ஒரு உடலை ஏற்று கொள்ளுதல், ஜட உடல், இது பல வழிகளில் நிபந்தனைக்குட்பட்டது. உடல் ஆறு வகையான மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அது பிறக்கிறது. உடல் பிறக்கிறது, உயிர்வாழிகள் அல்ல. இது ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறக்கிறது, அது சில காலம் நீடிக்கிறது, அது வளர்கிறது, அது சில துணைப் பொருள்களை உருவாக்குகிறது, பின்னர் உடல் குறைந்து கடைசியில் அது மறைந்துவிடும். ஆறு வகையான மாற்றங்கள். இந்த ஆறு வகையான மாற்றங்கள் மட்டுமல்ல, பல இன்னல்களும் உள்ளன. அவை மூன்று வகை துன்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன: உடல் தொடர்பானது, மனம் தொடர்பானது, பிற உயிரினங்கள் வழங்கும் துன்பங்கள், இயற்கை இடையூறுகளால் நடக்கும் துன்பங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழு விஷயமும் நான்கு கொள்கைகளாக சுருக்கப்பட்டுள்ளது, அதாவது பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய். இவை நமது நிபந்தனை வாழ்க்கை. 

எனவே, இந்த வாழ்க்கை நிலைமை களிலிருந்து வெளியேற, நாம் நமது பாகவத பக்தி அல்லது கிருஷ்ண பக்தியை புதுப்பித்தால், அல்லது கடவுள் பக்தி, நீங்கள் விரும்பியவாறு... கிருஷ்ணர் பற்றி நாம் பேசும்போது, ​​முழுமுதற் கடவுள் என்று பொருள். கடவுள் பக்தி, கிருஷ்ண பக்தி அல்லது நமது அசல் உணர்வு. நாம் ஒவ்வொருவரும், நாம் எப்போதும் அதை நினைவில் கொள்கிறோம், "நான் அத்தகையவரின் மகன். மற்றும் அத்தகைய பண்புள்ளவர் என் தந்தை." ஒருவர் தன் தந்தையையும் தந்தையுடனான உறவையும் நினைவில் கொள்வது இயல்பு. மேலும், சாதாரண பணியிலும், மரபு முறை ஒருவர் தனது அடையாளத்தை முன்வைத்தால், அவர் தனது தந்தையின் பெயரைக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் இது மிகவும் அவசியம், மற்றும் தந்தையின் பெயர் அனைவரின் கடைசி பெயராகும். ஆகவே, நாம் நித்தியமான தந்தையான கிருஷ்ணரை மறந்து, சுதந்திரமாக வாழ விரும்புகிறோம் ... சுதந்திரமாக என்பது என் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவது என்று பொருள். அது சுதந்திரம் என்று அழைக்கப்படுவதாகிறது. ஆனால் ... ஆனால் அத்தகைய சுதந்திரத்தால், நாம் ஒரு போதும் மகிழ்ச்சி அடைவதில்லை, மாயையான மகிழ்ச்சி என்று அழைக்கப்படும் ஒன்றிற்காக ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு நாம் இடமாற்றம் செய்கிறோம். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட உடலுக்கு மகிழ்ச்சியின் ஒரு குறிப்பிட்ட வசதி கிடைத்துள்ளது. நம் ஒவ்வொருவரையும் போலவே, நாம் வானத்தில் பறக்க விரும்புகிறோம். ஆனால் நாம் மனிதர்கள் என்பதால், நமக்கு இறக்கைகள் இல்லை, பறக்க முடியாது. ஆனால் பறவைகள், விலங்குகளாக இருந்தாலும், தாழ்ந்த விலங்குகள் என்றாலும் அவை எளிதில் பறக்க முடியும். இந்த வழியில், நீங்கள் பகுப்பாய்வு செய்தால், ஒவ்வொரு குறிப்பிட்ட உடலுக்கும் ஒரு குறிப்பிட்ட வகை வசதி கிடைத்துள்ளது, மற்றவைகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் நாம் விரும்புகிறோம். அதுதான் நம் விருப்பம்.