TA/Prabhupada 0961 - நம் நிலைமை ஆளப்படுவது பகவான் நம்மை ஆள்கிறார்

Revision as of 05:24, 14 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0961 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740707 - Lecture Festival Ratha-yatra - San Francisco

இந்த இயக்கம் பகவான் சைதன்ய மஹாபிரபு வினால் 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அதற்கு முன்பு பகவான் கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மாபெரும் பகவத்கீதையை கூறினார். உங்களில் பலபேர், பெயரைக் கேட்டு இருப்பீர்கள் "பகவத் கீதை உண்மையுருவில்" என்று நாங்கள் வெளியிட்டுள்ளோம். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அடித்தளம்"பகவத் கீதை உண்மையுருவில்". பகவத் கீதை.... பகவத் கீதையின் நோக்கம் நம்மை எல்லாம் ஞாபகப் படுத்துவதுதான்... நீங்கள் என்றால் அனைத்து உயிரிகளும், மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து உயிர்வாழிகளும். விலங்குகள், மரங்கள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள். உயிர்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ அதெல்லாம் பகவானின் அங்கம்தான். பகவானும் ஒரு உயிர்வாழி தான், அது வேதங்களில் கூறப்பட்டுள்ளது, பிரதானமான உயிர்வாழி. கத உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது, நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம். பகவான் நம்மைப்போன்ற உயர்வாழி தான், அவருக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: ஏகோ யோ பஹூனாம் விததாதி காமான். ஒரு உயிர் வாழி மற்ற உயிர் வாழிகளை வாழ வைக்கிறது. எனவே நமது நிலை பாதுகாக்கப்படுகிறது கடவுள் நம்மை பாதுகாக்கிறார். நம் நிலை ஆளப்படுவது பகவான் நம்மை ஆள்கிறார். எனவே, இந்த பௌதிக உலகத்தில், உயிர் வாழிகள், யாரெல்லாம் பகவானைப் போல ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களோ....

மனித வாழ்க்கைதான் அதற்கு ஒரு வாய்ப்பு, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி என்ற இந்த சூழலில் இருந்து விடுபடுவதற்கு. இந்தப் பெரும் அறிவியலில் மக்களை படிப்பிப்பதற்காக தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் உள்ளது. எனவே நாங்கள் ஏற்கனவே 20 புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம், ஒவ்வொன்றும் 400 பக்கங்கள், இந்த கிருஷ்ணபக்தி விஞ்ஞானத்தை விளக்குவதற்காக. ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், அவர்கள்கூட எங்கள் புத்தகத்தைப் படித்து புரிந்து கொள்ளலாம். பல புத்தகங்கள் வரவிருக்கின்றன.