TA/Prabhupada 0962 - நாம் கடவுளை மெய்யானவராகக் கருதுகிறோம்

Revision as of 05:37, 14 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0962 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720000 - Lecture BG Introduction - Los Angeles

ஆகவே, பகவத் கீதை உண்மையுருவில் பற்றிப் பேசுகிறேன். பகவத் கீதை உண்மையுருவில் என்று ஏன் கூறுகின்றேன் என்றால், பகவத் கீதையில் பல பதிப்புகள் உள்ளன. பகவத் கீதையின் உண்மையான சாரத்தை விட்டு விட்டு, தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். எனவே 'உண்மையுருவில்' என்ற இந்தப் பெயர் மிக முக்கியமானது, வேறு எந்த பகவத்கீதையின் பதிப்பிலும் இப்படி 'உண்மையுருவில்' என்று எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபசர் டைமோக் ஒரு முன்னுரை எழுதி உள்ளார், அவர் அதன் உட்கருத்தயும் வெகுவாக பாராட்டி இருந்தார். "பக்திவேதாந்த ஸ்வாமி பகவத் கீதையின் விளக்கத்தை இந்தக் கண்ணோட்டத்தில் விவரித்துள்ளார் அது சரியானதும் கூட" என்று கூறுகிறார். பகவத் கீதை உண்மையுருவில் இந்த மாபெரும் ஞானப் புத்தகத்தின் சரியான கருத்துரை என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவர் சொல்கிறார, "அதைவிட மேற்கத்திய வாசகர்கள் இதன் மொழிபெயர்ப்பினை படிக்கும் பொழுது ஒரு கிருஷ்ண பக்தன் தன்னுடைய சாஸ்திரங்களை தானே விளக்கினால் எப்படி இருக்கும் என்பதை படிப்பதற்கு இது ஒரு பிரத்தியேக வாய்ப்பாக இருக்கும்." எனவே கிருஷ்ணரைப் பற்றி.... பக்தர்களால் தான் கிருஷ்ணரைப் பற்றிய விளக்கம் கொடுக்க முடியும். மற்றவர்களை, பக்தர்களாக இல்லை என்றால், அவர்களால் எப்படி கிருஷ்ணரைப் பற்றி விளக்க முடியும்? குடும்பத்தின் அங்கமாக இருப்பவருக்கு தான் குடும்பத் தலைவரை பற்றி கூறமுடியும்; அதுவே ஒரு வேற்று மனிதருக்கு எப்படி அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்திருக்கும்? அது சாத்தியமல்ல. அது போல தான். கிருஷ்ணரைப் பற்றி கிருஷ்ணருடைய பக்தன் தான் சிறப்பாக பேச முடியும். மற்றவர்கள் அல்ல. மற்றவர்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி பேசும் அதிகாரமே இல்லை, கிருஷ்ணரே அர்ஜுனன் பகவத் கீதை படிப்பதற்கு சரியான மாணவன் என்று ஏற்றுக் கொள்கிறார். ஆரம்பத்தில் கிருஷ்ணர், "உன்னை என் மாணவனாக நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் ஏனெனில் நீ எனக்கு நண்பனும் பக்தனும் ஆவாய்" என்று கூறுகிறார். எனவே வேறுவிதமாக கூறினால் கிருஷ்ணருடன் நெருங்கிய உறவு கொண்டவர்களால் மட்டுமே பகவத்கீதையை புரிந்துகொள்ள முடியும். "நீ என் பிரிய தோழன்" கிருஷ்ணர் சொல்வதைப்போல அவனுக்கு கிருஷ்ணருடன் நெருங்கிய உறவு இருக்கிறது. பக்தன் ஆகாமல் ஒருவரால் கிருஷ்ணருடன் நெருங்கிய உறவு கொள்ள முடியாது. இந்த விஷயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

பகவத்கீதை 5000 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டது, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்காக. கடவுளை புரிந்து கொள்வதற்கான விஞ்ஞானம் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. பகவத் கீதை இறை விஞ்ஞானம். அனைத்திற்குமே ஒரு விஞ்ஞானம் உள்ளது, விஞ்ஞான புத்தகம், அந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு. அதுபோல இறைவனைப் பற்றியும் பல விதமான கருத்துக்கள் உள்ளன. பொதுவாக, அது ஒரு கருத்தாகவே கருதப்படுகிறது ஆனால் நாம் அதனை வெறும் கருத்தாக பார்ப்பதில்லை. நாம் இறைவனை ஒரு உண்மையான விஷயமாக கருதுகிறோம்.. நான் உங்களைப் பார்ப்பதும், நீங்கள் என்னைப் பார்ப்பதும், எப்படி உண்மையோ. அது போல. உன்னால் கடவுளைப் பார்க்க முடியும், கடவுள் உன்னை பார்க்கிறார். அதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் உன்னாலும் கடவுளை காண முடியும். அதற்கான வழிமுறையை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வழிமுறை அனைத்து வேத இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழிமுறைக்கு பெயர்தான் பக்தியோகம். கிருஷ்ணர் பகவத் கீதையில், பக்த்யா மாம் அபிஜாநாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: (ப.கீ. 18.55). கிருஷ்ணர் யார் என்று யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் பக்தி யோகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். யோகங்களில் பல இருக்கின்றன. யோகம் என்பது முழுமுதற் கடவுளுடன் நம்மை இணைத்துக் கொள்வது. எனவே, அனுமான யோகம் நமக்கு உதவாது. உண்மையான யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். உண்மையான யோகம் கிருஷ்ண பக்தி.