TA/Prabhupada 0963 - கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கிருஷ்ண பக்தனால் மட்டுமே பகவத் கீதையை புரிந்துக

Revision as of 07:30, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720000 - Lecture BG Introduction - Los Angeles

எனவே, நாங்கள் பகவத் கீதையின் முன்னுரையில் கொடுத்திருக்கிறோம், அதாவது பகவத் கீதையை நேரடியாக எப்படி கொடுத்து உள்ளதோ அப்படியே ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான வழி அதில் கூறப்பட்டு இருக்கிறது. வழிகாட்டுதல்கள் இல்லாமல் மக்கள் பகவத் கீதையை படிக்க முயல்கின்றனர். ஒரு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் ஆனால், அது எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பாட்டிலின் வெளியே கொடுக்கப்பட்டிருக்கும், அதுபோல இதை நாங்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறோம். இத்தனை சொட்டுக்கள் இத்தனை முறை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வழிமுறை கூறப்பட்டிருக்கும். அதுபோல பகவத்கீதையை உண்மையாக புரிந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு வழிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், கிருஷ்ணர் கூறிய உள்ளபடியே. அவர் கூறுகிறார், பல பல ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்த பகவத் கீதையை சூரியபகவானுக்கு சொல்லியிருக்கிறார். பின்னர் சூரிய பகவான் அந்த ஞானத்தை தன் மகன் மனுவிற்கு வழங்கியுள்ளார். அதன்பின் மனு தன் மகனான இக்ஷ்வாகுவிற்கு அந்த ஞானத்தை எடுத்துரைத்தார்.

இமம் விவஸ்வதே யோகம்
ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ
மனுர் இக்ஷ்வாகவே 'ப்ரவீத்
(ப.கீ. 4.1).

ராஜ ரிஷிகள் என்பவர்கள் மன்னர்கள். மனோ ஒரு ராஜா, மகாராஜா இக்ஷ்வாகுவும் ராஜா, சூரிய கடவுளான விவஸ்வானும் ராஜா. அவர்தான் சூரிய மண்டலத்திற்கு மன்னர். அவருடைய பேரன் இக்ஷ்வாகு இந்த கிரகத்திற்கே மன்னனானார். ரகுவம்சம் என்று கூறப்படும் இந்த குளத்தில்தான் பகவான் ராமச்சந்திரனும் தோன்றினார். மிகப்பழமையான மன்னர் குலம் இது. இக்ஷ்வாகு வம்சம், ரகு வம்சம். வம்சம் என்றால் குடும்பம். எனவே முன்னர், மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர்கள், அவர்கள் கடவுளின் பரிந்துரைகளை படித்தனர். எனவே பகவத் கீதையின்படி ஒரு பக்தனால் மட்டுமே, கிருஷ்ணருடன் மிக நெருங்கிய உறவு கொண்ட ஒருவரால் மட்டுமே, பகவத் கீதையை புரிந்துகொள்ள முடியும். கிருஷ்ணா அர்ஜூனன் கிருஷ்ணரிடமிருந்து பகவத்கீதையை கேட்ட பின்னர், அவரை பின் வருமாறு அழைக்கிறான்:

பரம் ப்ரஹ்ம பரம் தாம
பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஷாஷ்வதம் திவ்யம்
ஆதி-தேவம் அஜம் விபும்
(ப.கீ. 10.12).

கிருஷ்ணரை அவன் பரப்பிரம்மமாக ஏற்றுக்கொள்கிறான். பரப்பிரம்மம் என்றால் உன்னதமான உண்மை. பரம்பொருள், பரப்பிரம்மம். பிரம்மன் என்று உயிர் வாழிகளையும் சொல்வதுண்டு, ஆனால் உயிர் வாழிகள் பரப்பிரம்மம் அல்ல. பர பிரம்மம் என்பது உன்னதமானது. எனவே அர்ஜுனன் அவரை பரப்பிரம்மம் பரந்தாமன் என்று அழைக்கிறான். பரம்தாமம் என்றால் அனைத்தும் குடி கொண்டுள்ள இடம். அனைத்தும் முழுமுதற் கடவுளின் சக்தியில் குடிகொண்டுள்ளது. எனவே அவன் பரந்தாமன் என்று அழைக்கப்படுகிறான். அனைத்து கிரகங்களும் சூரிய ஒளியில் தங்கியிருப்பதை போன்று. சூரிய ஒளியின் சூரிய மண்டலத்தின் சக்தி. அதுபோல்தான் ஜட சக்தி கிருஷ்ணரின் சக்தி. அனைத்தும் பதிகமும் ஆன்மிகமும் குடி கொண்டிருப்பது கிருஷ்ணரின் சக்தியில். கிருஷ்ணரின் சக்தி அனைத்தையும் தாங்குகிறது. மற்றொரு இடத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்:

மயா ததம் இதம் ஸர்வம்
ஜகத் அவ்யக்த-மூர்தினா
மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி
ந சாஹம் தேஷ்வவஸ்தித:
(ப.கீ. 9.4).

கிருஷ்ணர் சொல்கிறார் "எனது அருமை ரூபத்தில் நான் அனைத்து இடத்திலும் பரவி இருக்கின்றேன்." எங்கும் வியாபித்து இருத்தல். பகவான் தனது அருவ ரூபத்தினால் அதாவது சக்தியினால் எங்கும் வியாபித்திருக்கிறார். சூடு நெருப்பின் சக்தியாக இருப்பது இதற்கு உதாரணமாக கட்டப்படுகிறது. நெருப்பு தனது ஒளியாலும் வெப்பத்தாலும் பரவுகிறது. நெருப்பு ஓர் இடத்தில் இருக்கிறது, ஆனால் ஒளியும் வெப்பமும் பரவுகிறது. அதுபோல்தான், கிருஷ்ணர் தன்னுடைய இருப்பிடத்தில், பூலோக பிருந்தாவனத்தில் இருக்கின்றார். ஆன்மீக உலகத்தில் மிகப்பெரிய கிரகம் ஒன்று இருக்கின்றது.