TA/Prabhupada 0983 - பௌதீக தன்மையுடைய மனிதர்களால் தங்கள் புலன்களை கட்டுப்படுத்த முடியாது

Revision as of 15:59, 14 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0983 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720905 - Lecture SB 01.02.06 - New Vrindaban, USA

தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம், புத்தி-யோகம் ததாமி தம் (ப. கீ 10.10). "அவர்களுக்கு நான் அறிவை தருகிறேன்,"என்று கிருஷ்ணர் கூறுகிறார். யாருக்கு? ஸதத-யுக்தானாம் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளவருக்கு. எந்த வகையில் ஈடுபட்டு உள்ளவருக்கு? பஜதாம், பஜனை, பக்தித் தொண்டில் ஈடுபட்டு உள்ளவருக்கு. எத்தகைய பக்தி தொண்டு? ப்ரீதி-பூர்வகம் அன்புடனும் பாசத்துடனும் கூடியது. அன்புடனும் பக்தியுடனும் பகவானிடம் ஒருவர் பக்தி தொண்டு செய்தல். அன்பின் அறிகுறி என்ன? அறிகுறி முதன்மையான அறிகுறி மிக முக்கியமான அறிகுறி அன்பிற்கு என்னவென்றால் பக்தன் பகவானுடைய பெயரையும் புகழையும் பரப்புவதற்கு மிகுந்த ஆசை கொள்வது. "என் பகவானுடைய பெயர் அனைத்து இடங்களிலும் ஒலிக்க வேண்டும்," என்று அவன் விரும்புகிறான். அதுவே அன்பு. நான் யாரையாவது விரும்பினால் அவருடைய புகழ் உலகமெல்லாம் பரவ வேண்டும் என்று எண்ணுகிறேன். கிருஷ்ணரும் பகவத்கீதையில் சொல்கிறார் ந ச தஸ்மாத் மனுஷ்யேஷு கஷ்சித் மே ப்ரிய-க்ருத்தம:, தன்னைப்பற்றிய பெருமைகளை பிறருக்கு எடுத்துச் சொல்பவரை விட வேறு எவரும் தனக்கு பிரியமானவர் இல்லை.

எப்படி அன்பு செலுத்துவது அன்பின் அறிகுறி என்ன என்ற அனைத்தும் பகவத்கீதையில் உள்ளது. கடவுளை எப்படி திருப்தி செய்வது அவர் உன்னுடன் எப்படி பேசுவார் அத்தனையும் இருக்கிறது. ஆனால் நீ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பகவத் கீதை படிக்கிறேன் ஆனால் பகவத் கீதை படித்ததனால் நான் அரசியல்வாதி ஆகிறேன். அப்படி என்றால் நான் என்ன படித்து இருக்கிறேன் பகவத் கீதையில் இருந்து? அரசியல்வாதிகள் இருக்கலாம் ஆனால் பகவத் கீதையைப் அதன் முக்கிய நோக்கம் என்ன கிருஷ்ணரை அறிவது. கிருஷ்ணரை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது போல். அவருக்கு அரசியல் தெரியும் பொருளாதாரம் தெரியும் விஞ்ஞானம் தெரியும் தத்துவம் தெரியும். அவருக்கு சமயம் தெரியும் சமூகவியல் தெரியும் அனைத்தும் தெரியும். தஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏதம் விஜ்ஞாதம் பவந்தி, கிருஷ்ணர் பகவானை மட்டும் நீ புரிந்து கொண்டால் போதும் அனைத்தும் உனக்கு தெரிய தொடங்கிவிடும். எனவே கிருஷ்ணரே சொல்கிறார் உத்தியோகம் ததாமி தம் உன் உள்ளேயே இருந்து உனக்கு அறிவை தருகிறார் கிருஷ்ணர் என்றால் அவரை மிஞ்ச வேறு யார்? யாரும் அவரை வெல்ல முடியாது. ஆனால் கிருஷ்ணர் உனக்கு அறிவே கொடுப்பார் எப்போது நீ பக்தனாகவும் கிருஷ்ணனை விரும்புபவனாகவோ ஆகும்போது. தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம், புத்தி-யோகம் ததாமி தம் (ப.கீ 10.10) உத்தியோகம் என்பது என்ன உத்தியோகத்தில் மகத்துவம் என்ன? உத்தியோகம் அல்லது பக்தி யோகத்தின் மதிப்பு யேனமாம் உபயாந்தி தே வித்தகப் உத்தியோகம் அறிவு அவனை இறைவனின் திருநாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லும். இந்த அறிவினைக் கொண்டு அவன் நரகத்திற்குச் செல்வான் என்று இல்லை. அது பௌதீக அறிவு..

அதாந்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் (ஸ்ரீ.பா 7.5.30). அனைத்தும் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பௌதீக மனிதனுக்கு அதாந்த-கோபிர் அதான் த என்றால் தங்குதடையற்ற கோ என்றால் இந்திரியம் அல்லது புலன்கள். பௌதீக மனிதர்களால் தங்கள் புலன்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் புலன்களின் சேவகர்கள் கோதாஸ கோ என்றால் இந்திரியம் தாச என்றால் சேவகன். புலன்களை கட்டுப்படுத்தும் நிலைக்கு வரும் பொழுது நாம் கோஸ்வாமி என படுகிறோம். அது கோஸ்வாமி. கோஸ்வாமி என்றால் தன்னுடைய புலன்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தி இருப்பவனே குறைக்கும். சுவாமி அல்லது கோஸ்வாமி. சுவாமி கோஸ்வாமி இரண்டுமே அதையே தான் குறிக்கும். பொதுவாக அதாந்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் பழக்கப்படாத புலன்கள் செல்கின்றன, அது கிருஷ்ணர் அனுப்பினார் என்று ஆகாது அவன் தன்னுடைய பாதையை தானே சரி செய்து கொள்கிறான் பகவானின் திருநாட்டிற்கு செல்வதற்கு. அல்லது நரகத்தின் மாபெரும் இருட்டறையில் தள்ளப்படுவதற்கு. இரண்டு வாய்ப்புகள் உள்ளன அவை மனித வாழ்விலேயே கிடைக்கின்றன நாம்தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும். "மாயை கலைந்து விட்டதா?"கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து கேட்கிறார்.