TA/Prabhupada 0988 - ஸ்ரீமத் பாகவதத்தில் உணர்ச்சிமயமான சமயத்துவம் என்பது காணப்படுவதில்லை: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0987 - Don't Think that You will Starve in God Consciousness. You will Never Starve|0987|Prabhupada 0989 - By the Favor of Guru one gets Krsna. This is bhagavad-bhakti-yoga|0989}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0987 - கடவுள் பக்தியில் நீங்கள் பட்டினி கிடப்பீர்கள் என்று நினைக்க வேண்டாம். பட்டினி கிடக்க|0987|TA/Prabhupada 0989 - குருவினுடைய ஆசியினால் ஒருவருக்கு கிருஷ்ணர் கிடைக்கிறார். இதற்குப் பெயர் பகவத் பக்தி|0989}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:33, 16 August 2021



740724 - Lecture SB 01.02.20 - New York

ஏவம் ப்ரஸன்ன-மனஸோ
பகவத்-பக்தி-யோகத:
பகவத்-தத்த்வ-விஜ்ஞானம்
முக்த-ஸங்கஸ்ய ஜாயதே
(ஸ்ரீ.பா 1.2.20).

பகவத்-தத்த்வ-விஜ்ஞானம் அது உணர்ச்சி பூர்வமானது அல்ல இது விஞ்ஞானம் விஞ்ஞானம் என்றால் அறிவியல். பக்தன் ஆவது என்பது உணர்ச்சிவயப்படுவது அல்ல. உணர்வுபூர்வமான அவர்களுக்கு மதிப்பில்லை. யார் ஒருவருக்கு உணர்ச்சி வயப்படுகிறார்களோ இந்தக் குழந்தை ஆடுவதைப் போல உணர்ச்சி தூண்டுதல் இல்லை உணர்ச்சி வயப்பட வில்லை. ஆன்மீக எழுச்சியினால் அவன் ஆடுகிறான். இந்த நடனம் நாயின் நடனம் அல்ல. இது... கடவுள் பக்தியை உணர்பவன் ஆடுகிறான் கடவுள் பால் எவ்வளவுக்கெவ்வளவு அன்பை உணர்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனால் ஆட முடியும் ஜெபம் செய்ய முடியும் அழுக முடியும். பல இருக்கின்றன எட்டுவிதமான அஷ்ட-ஸாத்விக-விகார (சை. சஅந்த்ய 14.99): உடல் மாறுதல் கண்களில் நீர் வடிதல் எனவே...‌

பகவத் தத்துவ விஞ்ஞானம்
ஜ்ஞானம் பரம-குஹ்யம் மே
யத் விஜ்ஞான-ஸமன்விதம்
(ஸ்ரீ.பா 2.9.31)

கிருஷ்ணர் பிரம்மாவிடம் சொல்கிறார், ஜ்ஞானம் பரம-குஹ்யம் என்று. கிருஷ்ணரைப் பற்றி அறிவது மிகவும் ரகசியமானது. அது சாதாரண விஞ்ஞானத்தைப் போல அல்ல. ஆகவே பல விஞ்ஞானிகளும் நம்முடைய இயக்கத்தில் இணைகின்றனர். தத்துவ அறிஞர்கள் வேதியல் அறிஞர்கள் அனைவருக்கும் இது விஞ்ஞானம் என்பது புரிகிறது. நீங்கள் அதிக பிரச்சாரம் செய்ய செய்ய சமூகத்தின் மேல்தட்டு மக்கள் அதாவது படித்த அறிஞர்கள் பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் தத்துவவாதிகள் அனைவரும் இணைவார்கள். அவர்களுக்கு நம்மிடம் பல புத்தகங்கள் இருக்கின்றன. எண்பது புத்தகங்கள் வெளியிடும் திட்டம் நம்மிடம் உள்ளது. அதில் நாம் இதுவரை 14 புத்தகங்கள் வெளியிட்டு விட்டோம்.

எனவே இது ஒரு விஞ்ஞானம். இல்லையேல் ஸ்ரீமத் பாகவதத்தில் 18,000 ஸ்லோகங்கள் ஏன் இருக்கின்றன புரிந்துகொள்வதற்கு? ம்ம்? பாகவதத்தின் தொடக்கத்தில் சொல்லப்படுகிறது தர்ம: ப்ரோஜ்ஜித-கைதவோ 'த்ர (ஸ்ரீ.பா 1.1.2): ஏமாற்றுவது, உணர்ச்சி வயப்படுகிற சமய முறை என்று சொல்லப்படுவது, ப்ரோஜ்ஜித, வெளியேற்றப்பட்டு விட்டது. ஸ்ரீமத் பாகவதத்தில் அதற்கு இடமில்லை ப்ரோஜ்ஜித துடைப்பத்தை வைத்து கூட்டி தூசியை அப்புறப்படுத்துவது போல உணர்ச்சி வயப்படுகிற சமயத் துவம் ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லை. அது ஒரு விஞ்ஞானம் பரம-குஹ்யம் மிகவும் ரகசியமானது.