TA/Prabhupada 1027 - என் மனைவி, குழந்தைகள் மற்றும் சமூகம், என்னுடைய போர் வீரர்கள். நான் ஆபத்தில் இருந்தால், அ: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1026 - If We Understand We are not Enjoyer, Krsna is Enjoyer - that is Spiritual World|1026|Prabhupada 1028 - All These Politicians, They're Spoiling the Situation|1028}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1026 - அனுபவிப்பாளர் நாம் அல்ல, கிருஷ்ணர் தான் என்று புரிந்து கொண்டால், அதுதான் ஆன்மீக உலகம்|1026|TA/Prabhupada 1028 - இந்த அரசியல்வாதிகள், அவர்கள் சூழ்நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்|1028}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:37, 16 August 2021



731129 - Lecture SB 01.15.01 - New York

நீங்கள் கிருஷ்ணரின் சட்டங்களையோ அல்லது இயற்கையின் சட்டங்களையோ மீற முடியாது. அது சாத்தியமல்ல. நீங்கள் நிச்சயமாக சுதந்திரமானவர் அல்ல. இவர்கள் அயோக்கியர்களாக இருப்பதனால் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள்.அவர்கள் எப்போதும் தாங்கள் சுதந்திரமானவர்கள் என்று நினைப்பார்கள். இதுதான் எல்லா துன்பத்திற்கும் காரணம். யாருமே சுதந்திரமாக இல்லை. நீங்கள் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்? யாருமே சுதந்திரமாக இல்லை, நீங்கள் சுதந்திரமாக இருக்கவும் முடியாது. யாருமே சுதந்திரமாக இருக்க முடியாது. உண்மையில் யார் சுதந்திரமாக இருக்கிறார்கள்? இங்கு அமர்ந்திருக்கும் பல இளைஞர், இளைஞிகளுள் யாரால் "நான் எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமானவன்." என்று சொல்லமுடியும்? இல்லை, யாராலும் சொல்ல முடியாது. எனவே இது தான் நம்முடைய தவறு, மேலும் நம்முடைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதனால் நாம் இந்த பௌதீக உலகத்தில் பலவகையிலும் துன்பப்படுகிறோம். அதை திருத்தியாக வேண்டும். அது தடுக்கப்பட வேண்டும். அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ரு'ஷ்ண தா3ஸ (சை.சரி மத்ய 20.108-109). என்று சைதன்ய மஹாபிரபு பிரச்சாரம் செய்துள்ளார். உயிர்வாழிகளாகிய நாம், கிருஷ்ணரின் நித்யமான சேவகர்கள். இதுதான் நம்முடைய நிலை. ஆனால் "நான் ஏன் கிருஷ்ணரின் சேவகனாக ஆக வேண்டும்?" என்று நாம் அந்த நிலையை மறுத்தால், "நான் சுதந்திரமானவன்" என்றால், பிறகு உடனடியாக துன்பங்கள் தொடங்குகின்றன. க்ரு'ஷ்ண பு4லிய ஜீவ போ4க3 வஞ்ச2 கரே... நீங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உடனேயே, உடனடியாக... அதாவது உடனடியாக, அவன் மாயையால் பிடிக்க படுகிறான் க்ரு'ஷ்ண பு4லிய ஜீவ போ4க3 வாஞ்சா2 கரே பாஷ2தே மாயா தாரே ஜாபடியா த4ரே இது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையானது. அரசாங்கத்தின் சட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உடனேயே காவல்துறையினரால் கைது செய்யப்படுவதை போன்றது இது. நீங்கள் எதையும் உருவாக்க தேவையில்லை, இது ஏற்கனவே இருக்கிறது. எனவே நம்முடைய நிலை எப்போதும் கடவுளை சார்ந்ததுதான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதுவே கிருஷ்ண உணர்வு எனவேதான் பக்தி வினோத தாகூரா பாடியுள்ளார்,

மானஸோ தே3ஹோ கே3ஹோ, யோ கிசு2 மோர,
அர்பிலுன் துயா பதே3 நந்த3-கிஷோ2ர.

இந்தத் தவறு நடந்து கொண்டுதான் இருக்கிறது, அதாவது நான் சுதந்திரமானவன், அரசன், மேலும் என்னுடைய போர் வீரர்கள் அல்லது என்னுடைய சமூகம், இனம், குடும்பம் அல்லது நான் உருவாக்கியுள்ள பல விஷயங்கள்- ஆனால்

தே3ஹாபத்ய-கலத்ராதி3ஷ்
வாத்ம-ஸைன்யேஷ்வஸத்ஸ்வபி
தேஷாம்' நித4னம்' ப்ரமத்த:
பஷ்2யன்ன் அபி ந பஷ்2யதி
(ஸ்ரீமத் பா 2.1.4).

ஒரு மனிதன் போரிடுவதை போல, அதாவது ஹிட்லர் போரைப் பிரகடனப்படுத்தியதைப் போல அல்லது பலர் போரை பிரகடனப் படுத்தியதைப் போல.. இந்த மனிதன் பிரகடனம் செய்கிறான், அனைவரும் நினைக்கிறார்கள் "நான் சுதந்திரமானவன்." நாம் நினைக்கிறோம், நம்மிடம் பல போர் வீரர்கள் உள்ளனர், பல அணுகுண்டுகள் உள்ளன, மேலும் பல விமானங்கள் உள்ளன, நாம் வெற்றி அடைவது நிச்சயம். அதைப் போலவே நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம் "நான் சுதந்திரமானவன், மேலும் என்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் சமூகம் என்னுடைய போர் வீரர்கள். நான் ஆபத்தில் இருந்தால் அவர்கள் எனக்கு உதவுவார்கள்." இது தான் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் மாயை எனப்படுகிறது. ப்ரமத்த: தேஷாம்' நித4னம்' பஷ்2யன்ன் அபி ந பஷ்2யதி. நாம் இந்த கடவுளிடமிருந்து சுதந்திரம், பெயரளவு சுதந்திரத்தின் மீது பைத்தியமாக இருப்பதனால், இந்த விஷயங்கள் நமக்கு உதவும் என்று நினைக்கிறோம், நம்மை காக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் இது மாயை. தேஷாம்' நித4னம், அனைத்தும் அழிக்கப்படும். யாரும் நமக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. உண்மையான பாதுகாப்பை விரும்பினால், அவன் கிருஷ்ணரது பாதுகாப்பை பெற வேண்டும். இதுதான் பகவத் கீதையின் அறிவுரை :ஸர்வ-த4ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷ2ரணம்' வ்ரஜ (ப.கீ 18.66) .. அயோக்கியனே, பல விஷயங்கள் உனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது சாத்தியமாகாது. நீ முடிந்து போவாய், மேலும் உன்னுடைய பெயரளவு பாதுகாப்பாளர்கள், நண்பர்கள் மற்றும் போர் வீரர்கள் அனைவருமே முடிந்து போவார்கள். நீ அவர்களை நம்பி இருக்காதே, ஸர்வ-த4ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷ2ரணம்' வ்ரஜ (ப.கீ 18.66) .. நீ என்னிடம் மட்டும் சரணடைவாயாக, நான் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறேன். அஹம்' த்வாம்' ஸர்வ-பாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷு2ச:. இது தான் உண்மையான பாதுகாப்பு.