TA/Prabhupada 1038 - புலியின் உணவு - மற்றொரு மிருகம், மனிதனின் உணவு - பழங்கள், தானியங்கள், பால் பொருட்கள்

Revision as of 08:31, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730809 - Conversation B with Cardinal Danielou - Paris

பிரபுபாதா : விரல் என்னுடைய உடலின் ஒரு அங்கம், ஆனால் அதனுடைய வேலை இந்த உடலுக்கு சேவை செய்வதுதான். நான் விரலை கேட்கிறேன் "இங்கே வா." அதுவும் அதன் போல செயல்படுகிறது. நான் இந்த விரலை கேட்கிறேன்: "நீ இங்கே வா." அது செய்கிறது... எனவே இதுதான் விரலினுடைய வேலை, முழுமைக்கு சேவை செய்வது. அது ஒரு அங்கம், மேலும் உடல் என்பது முழுமை. எனவே அங்க துணுக்கின் வேலை, முழுமைக்கு சேவை செய்வதுதான். இதுதான் இயல்பான நிலை.

யோகேஷ்வரா : ( பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு )

கார்டினல் தனிலோ : நான் இதனை ஒப்புக் கொள்கிறேன்....

பிரபுபாதா: நான் பேசி முடிக்கிறேன்.

கார்டினல் தனிலோ: ஆம். நான் நினைக்கிறேன் ஒவ்வொரு உயிர்வாழியின் வேலையும், கடவுளுக்கு சேவை செய்வதுதான். கடவுளுக்கு சேவை.

பிரபுபாதா : ஆம். உயிர்வாழி, தன்னுடைய இந்த வேலையை மறக்கும் போது, அதுதான் பௌதிக வாழ்க்கை.

கார்டினல் தனிலோ : அதாவது ? (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

யோகேஸ்வர : (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

பிரபுபாதா : எனவே இந்த பௌதிக உலகில், கிட்டத்தட்ட அனைவரும் கடவுளை மறந்து விட்டதை நாம் காண்கிறோம். யோகேஷ்வரா: (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

கார்டினல் தனிலோ : ( பிரெஞ்சு மொழி - சரி)

பிரபுபாதா : முடிவு என்னவெனில், இந்த பௌதிக உலகம் படைக்கப்பட்டது.....

கார்டினல் தனிலோ: படைக்கப்பட்டது....

பிரபுபாதா : படைக்கப்பட்டது மறந்த ஆத்மாக்களுக்காகத்தான். யோகேஸ்வர: (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

கார்டினல் தனிலோ : ஆம்

பிரபுபாதா : மேலும் இங்கே நம்முடைய வேலை, கடவுள் உணர்வை மீண்டும் தூண்டி விடுவது தான். யோகேஸ்வரா : (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

கார்டினல் தனிலோ : ஆம்.

பிரபுபாதா : எனவே உயிர்வாழியை, குறிப்பாக மனிதனை அறிவொளியூட்டும் வழிமுறை, ஏனெனில் மிருக பிறப்பில் ஒருவனை ஞானத்தை பெறச் செய்ய முடியாது. ஒரு மிருகம், கடவுள் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளவும் செய்யாது.

கார்டினல் தனிலோ : ஆம் ஆம்

பிரபுபாதா: மனிதன் மட்டும் தான் இதனை புரிந்து கொள்ள முடியும். அவன் பயிற்சி பெற்றால், பிறகு அவன் கடவுள் உணர்விற்கு வரலாம்.

கார்டினல் தனிலோ : ஆமாம் அது சரிதான்.

பிரபுபாதா எனவே இந்தப் படைப்பு, மறந்த ஆத்மாக்களுக்கானது. அவர்களுக்கு, தங்கள் கடவுள் உணர்வை புதுப்பித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு. யோகேஸ்வர : புரிகிறதா?

கார்டினல் தனிலோ : ஆம். நன்றாக புரிகிறது. மிக மிகத் தெளிவாக இருக்கிறது. மிகத் தெளிவு.

பிரபுபாதா : மேலும் இந்த வேலைக்காக சில சமயம் கடவுளே வருகிறார். சில சமயம் தன்னுடைய பிரதிநிதியை, தன் மகனை அல்லது தன் பக்தனை, தன் சேவகனை அனுப்புகிறார் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடவுள் இந்த மறதியில் உள்ளஆத்மாக்கள் தன்னுடைய வீட்டிற்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறார்.

கார்டினல் தனிலோ : ஆம், திரும்புதல்.

பிரபுபாதா : எனவே அவர் பக்கத்திலிருந்து, கடவுள் உணர்வை புதுப்பிப்பதற்கான தொடர்ந்து முயற்சி இருக்கிறது.

கார்டினல் தனிலோ : ஆம்.

பிரபுபாதா  : இப்போது இந்த கடவுள் உணர்வை மனிதப் பிறப்பில் எழுச்சி பெறச் செய்யலாம், மற்ற பிறவிகளில் அல்ல.

கார்டினல் தனிலோ : மற்ற பிறவிகளில் அல்ல, ஆம்.

பிரபுபாதா : மிக அரிதாக நடக்கலாம் ஆனால் மனித பிறப்பில்.... (மற்றொரு பக்கத்தில்) தண்ணீர் எங்கே? யோகேஸ்வறா : அவர் கொண்டு வருவதாக கூறினார்....

பிரபுபாதா  : சரி. உறங்கிய நிலையில் உள்ள கடவுள் உணர்வை எழுச்சி பெறச் செய்வதற்கான தனிச் சிறப்பு, மனிதப்பிறவியில் இருக்கிறது. யோகேஷ்வரா : (பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

கார்டினல் தனிலோ : ஆம்.

பிரபுபாதா : எனவே மனித சமுதாயத்திற்கு மிகச் சிறந்த சேவை ,அவர்களுடைய கடவுள் உணர்வை எழுச்சி பெறச் செய்வதுதான்.

கார்டினல் தனிலோ : உண்மை, உண்மை.

பிரபுபாதா : சிறந்த சேவை.