TA/Tamil Main Page

Revision as of 18:36, 20 December 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0042: Pads main pages after having upgraded MediaWiki)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


வாணிபீடியா என்றால் என்ன

வாணிபீடியா என்பது ஸ்ரீல பிரபுபாதரின் சொற்களுக்கான/பேச்சுக்கான(வாணி) உயிரோட்டமுள்ள கலைக்களஞ்சியம். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அவற்றை முழுமையாகத் தொகுத்து, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும், எளிதாகப் புரியும் வண்ணமும் வழங்கும் ஒரு கூட்டுமுயற்சியே இஃது. அனைவரும் பயன்பெறும் வகையில் கிருஷ்ண பக்தி எனும் விஞ்ஞானம் தொடர்ந்து உலக அரங்கில் உபதேசிக்கப்படவும் பயிற்றுவிக்கப்படவும் வேண்டி, மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களுக்காக, ஓர் ஒப்பில்லாக் களஞ்சியத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாணிபீடியா செயல்திட்டமானது உலகளாவிய பன்மொழிக் கூட்டு செயல்பாடாகும். ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் பலரும் பல்வேறு விதங்களில், பங்களிக்க முன்வருகின்றபடியால் இந்த முயற்சி வெற்றி அடைந்து வருகிறது. ஒவ்வொரு மொழியும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றது. ஸ்ரீல பிரபுபாதரின் பதிவுசெய்யப்பட்ட உபன்யாசங்களும் உரையாடல்களும் மற்றும் அவருடைய கடிதங்களும் குறைந்தது 16 மொழிகளில் முழுவதுமாகவும், 32 மொழிகளில் குறைந்தபட்சம் 25%மாயினும் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்பது எங்களது ஆவல். நவம்பர் 2027 இல் வரும் அவருடைய ஐம்பதாவது நினைவு நாளை ஒட்டி இதனை நாம் அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம். அந்த மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்குமா?

தமிழ் வாணிக்கான இணைப்புகள்

தமிழ் வாணிபீடியாவுக்குச் செல்லும் இணைப்புகள்:

தமிழ் மொழிபெயர்ப்புகளுடன் கூடிய ஸ்ரீல பிரபுபாதரின் 1080 காணொளிகளை இங்கே காணலாம்.

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்களுக்கான காணொளிகள் மற்றும் எழுத்துவடிவங்களுக்கான பக்கங்கள்.

இங்தக் கொள்கை விளக்க அறிக்கையானது வாணிபீடியாவின் நோக்கத்தை விளக்குவதாகும்.

Nectar Drops are short excerpts from Srila Prabhupada's lectures, conversations and morning walks. These short(less than 90 seconds) audio clips are so powerful and will enlighten your soul and fill it with peace and happiness!

எங்களுடன் கூட்டு செயல்பாட்டில் இணையுங்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வரும் இவ்வேளையில் அவரது வாணி முழுவதும் தமிழாக்கப்பட வேண்டும் என்பது இப்போதைய உடனடித் தேவை. கிருஷ்ண பக்திக்கு மொழி ஒரு தடையாக இருத்தல் கூடாது. தொண்டர்கள் கிருஷ்ண பக்தியைப் பரப்பப் பாடுபடும் இவ்வேளையில் மக்கள் தாங்களே படித்தறிய விழைந்தால் புத்தகங்கள் தமிழில் இருக்கவேண்டியது அவசியம். மேலும் இணைய தளத்தின் பிரயோகம் பல்கிப் பெருகிவரும் காலத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் வாணி எளிதாக மக்களைச் சென்றடைய இந்த இணையதளம் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிவன்மையும் கொண்டோர், மொழிபெயர்க்கும் இந்த அரிய சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

பகவத் கீதை உண்மையுருவிலிருந்து சில ஸ்லோகங்கள்

Bhagavad-gita 4.8

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥८॥
paritrāṇāya sādhūnāṁ
vināśāya ca duṣkṛtām
dharma-saṁsthāpanārthāya
sambhavāmi yuge yuge

SYNONYMS

paritrāṇāya—for the deliverance; sādhūnām—of the devotees; vināśāya—for the annihilation; ca—also; duṣkṛtām—of the miscreants; dharma—principles of religion; saṁsthāpana-arthāya—to reestablish; sambhavāmi—I do appear; yuge—millennium; yuge—after millennium.

TRANSLATION

In order to deliver the pious and to annihilate the miscreants, as well as to reestablish the principles of religion, I advent Myself millennium after millennium.

PURPORT

According to Bhagavad-gītā, a sādhu (holyman) is a man in Kṛṣṇa consciousness. A person may appear to be irreligious, but if he has the qualifications of Kṛṣṇa consciousness wholly and fully, he is to be understood to be a sādhu. And duṣkṛtam applies to one who doesn't care for Kṛṣṇa consciousness. Such miscreants, or duṣkṛtam, are described as foolish and the lowest of mankind, even though they may be decorated with mundane education; whereas another person, who is one hundred percent engaged in Kṛṣṇa consciousness, is accepted as sādhu, even though such a person may neither be learned nor well cultured. As far as the atheistic are concerned, it is not necessary for the Supreme Lord to appear as He is to destroy them, as He did with the demons Rāvaṇa and Kaṁsa. The Lord has many agents who are quite competent to vanquish demons. But the Lord especially descends to appease His unalloyed devotees, who are always harassed by the demonic. The demon harasses the devotee, even though the latter may happen to be his kin. Although Prahlāda Mahārāja was the son of Hiraṇyakaśipu, he was nonetheless persecuted by his father; although Devakī, the mother of Kṛṣṇa, was the sister of Kaṁsa, she and her husband Vasudeva were persecuted only because Kṛṣṇa was to be born of them. So Lord Kṛṣṇa appeared primarily to deliver Devakī, rather than kill Kaṁsa, but both were performed simultaneously. Therefore it is said here that to deliver the devotee and vanquish the demon miscreants, the Lord appears in different incarnations.

In the Caitanya-caritāmṛta of Kṛṣṇadāsa Kavirāja, the following verses summarize these principles of incarnation:

sṛṣṭi-hetu yei mūrti prapañce avatare
sei īśvara-mūrti 'avatāra' nāma dhare
māyātita paravyome savāra avasthāna
viśve 'avatāri' dhare 'avatāra' nāma.

"The avatāra, or incarnation of Godhead, descends from the kingdom of God for material manifestation. And the particular form of the Personality of Godhead who so descends is called an incarnation, or avatāra. Such incarnations are situated in the spiritual world, the kingdom of God. When they descend to the material creation, they assume the name avatāra."

There are various kinds of avatāras, such as puruṣāvatāras, guṇāvatāras, līlāvatāras, śaktyāveśa avatāras, manvantara-avatāras and yugāvatāras-all appearing on schedule all over the universe. But Lord Kṛṣṇa is the primeval Lord, the fountainhead of all avatāras. Lord Śrī Kṛṣṇa descends for the specific purposes of mitigating the anxieties of the pure devotees, who are very anxious to see Him in His original Vṛndāvana pastimes. Therefore, the prime purpose of the Kṛṣṇa avatāra is to satisfy His unalloyed devotees.

The Lord says that He incarnates Himself in every millennium. This indicates that He incarnates also in the age of Kali. As stated in the Śrīmad-Bhāgavatam, the incarnation in the age of Kali is Lord Caitanya Mahaprabhu, who spread the worship of Kṛṣṇa by the saṅkīrtana movement (congregational chanting of the holy names), and spread Kṛṣṇa consciousness throughout India. He predicted that this culture of saṅkīrtana would be broadcast all over the world, from town to town and village to village. Lord Caitanya as the incarnation of Kṛṣṇa, the Personality of Godhead, is described secretly but not directly in the confidential parts of the revealed scriptures, such as the Upaniṣads, Mahābhārata, Bhāgavatam, etc. The devotees of Lord Kṛṣṇa are much attracted by the saṅkīrtana movement of Lord Caitanya. This avatāra of the Lord does not kill the miscreants, but delivers them by the causeless mercy of the Lord.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் குறுங்காணொளிகள்


தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் ஒலிப்பதிவுத் துளிகள்


TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதீக வளிமண்டலம் முழுவதும் இயற்கையின் முக்குணங்களால் நிறம்பியுள்ளது. ஆகவே பௌதீக இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டு வர வேண்டும். ஒருவர் முதல் தர கைதியாக மாற முயற்சிக்கக் கூடாது. சிறைச்சாலையில், ஒருவர் மூன்றாம் தரக் கைதியாகவும், ஒருவர் முதல் தரக் கைதியாகவும் இருக்க, மூன்றாம் தரக் கைதி 'நான் இந்த சிறை வீட்டில் தங்கி முதல் வகுப்பு கைதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்படக்கூடாது. அது நல்லதல்ல. சிறைச் சுவர்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும், அல்லது சிறைச்சாலைக்கு வெளியே வர வேண்டும். அதுவே அவரது நோக்கம். "

690101 - சொற்பொழிவு BG 03.31-43 - லாஸ் ஏஞ்சல்ஸ்



வாணிபீடியாவின் கொள்கை விளக்க அறிக்கை

↓ Scroll down to read more...

முன்னுறை

ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய போதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். எனவே வாணிப்பீடியா, அவரது புத்தகங்கள், பதிவு செய்யப்பட்ட உபன்யாசங்கள், உரையாடல்கள், கடிதங்கள் போன்றவற்றுக்காக முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முழுமை பெற்ற நிலையில் உலகிலேயே முதன் முதலில் அமைந்த வாணி கோவிலாக வாணிப்பீடியா திகழும். உண்மையான ஆன்ம ஞானத்தை தேடி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு புனித இடமாக இருந்து ஸ்ரீல பிரபுபாதரின் உயரிய போதனைகள் மூலம் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து ஆன்மீக உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக, எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளிலும் இது விளங்கும்.

வாணிபீடியாவின் தொலைநோக்குக் கொள்கை

ஸ்ரீல பிரபுபாதர் பன்மொழி வாணியை செயல்படுத்துவதற்கும் முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் அதனால் நூற்றுக்கணக்கான மக்களும் கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்டு வாழவும் மற்றும் மனித சமுதாயத்தை மீண்டும் ஆன்மீக மயமாக்க பகவான் சைதன்ய மகாபிரபுவின் சங்கீர்த்தன இயக்கத்திற்கு உதவி செய்தலுமே இதன் தொலைகநோக்குக் கொள்கை.

கூட்டுமுயற்சி

ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைத் தொகுத்து, விடாமுயற்சியுடன் மொழிபெயர்க்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெகுஜனக் கூட்டு முயற்சியால் மட்டுமே வாணிபீடியாவில் வெளிப்படும் அளவிற்கு ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.

ஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து புத்தகங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள் மற்றும் கடிதங்களின் மொழிபெயர்ப்பை வாணிபீடியாவில் நவம்பர் 2027 க்குள் குறைந்தது 16 மொழிகளில் முடிக்கவும் குறைந்தது 108 மொழிகளில் சிறிதளவேனும் முடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

அக்டோபர் 2017 நிலவரப்படி முழு பைபிளும் 670 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, புதிய ஏற்பாடு 1,521 மொழிகளிலும் பைபிள் பகுதிகள் அல்லது கதைகள் 1,121 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் கணிசமான அளவு அதிகமாக இருக்கும்போதிலும், ​​கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை உலகளவில் பரப்புவதற்கு எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும்போது எந்தவிதத்திலும் அதிகமில்லை என்பதையே காட்டுகிறது.

மனிதகுலத்தின் நலனுக்காக வலையில் ஸ்ரீல பிரபுபாதரின் பன்மொழி வாணி இருப்பை முழுமையாக வெளிப்படுத்தும் இந்த உன்னத முயற்சியில் எங்களுடன் இணையுமாறு அனைத்து பக்தர்களையும் அழைக்கிறோம்.

வேண்டுதல்

1965 ஆம் ஆண்டில் ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பேதுமின்றி வந்தார். 1977 ஆம் ஆண்டில் அவரது உன்னதமான வபு மறைந்த போதிலும், அவர் இன்னும் தனது வாணியாக இருக்கிறார். இந்த இருப்பைத்தான் நாம் இப்போது அழைக்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதரை வேண்டிக் கெஞ்சுவதன் மூலம் மட்டுமே அவர் நம்மிடையே தோன்றுவார். அவரை நம்மிடையே வைத்திருக்க வேண்டும் என்ற நமது தீவிர ஆசைதான் அவரை நம்மிடையே கொண்டுவருவதற்கான திறவுகோல்.

முழுமையான வெளிப்பாடு

எங்கள் முன் ஸ்ரீல பிரபுபாதர் பகுதியாக மட்டும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவரது முழு வாணி இருப்பை நாங்கள் விரும்புகிறோம். அவர் பதிவுசெய்த போதனைகள் அனைத்தும் முழுமையாக தொகுக்கப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்த கிருகத்தின் வருங்கால சந்ததியினருக்கு இது நாங்கள் உருவாக்கும் சொத்து - ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின் முழுமையான இருபிடம் (ஆசிரயா).

வாணியின் தோற்றம்

ஸ்ரீல பிரபுபாதரின் முழு வாணியின் தோற்றம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படும். முதல், எளிதான கட்டம் - ஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து போதனைகளையும் அனைத்து மொழிகளிலும் தொகுத்து மொழிபெயர்ப்பது. இரண்டாவது, மிகவும் கடினமான கட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருடைய போதனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.

படிப்பதற்கான பல்வேறு வழிகள்

  • இன்றுவரை, எங்கள் ஆராய்ச்சியில், ஸ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களைப் படிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்திய 60 வெவ்வேறு வழிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் 60 வேறு வழிகள்.
  • ஸ்ரீல பிரபுபாதரிவின் புத்தகங்களை இந்த வெவ்வேறு வழிகளில் படிப்பதன் மூலம் அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ளலாம். படிப்பதற்கான கருப்பொருள் சார்ந்த முறையைப் பின்பற்றி அவற்றைத் தொகுப்பதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதர் முன்வைக்கும் ஒவ்வொரு சொல், சொற்றொடர், கருத்து அல்லது ஆளுமை ஆகியவற்றின் அர்த்தங்களின் ஆழமான முக்கியத்துவத்தை எளிதில் ஊடுருவி அறிய முடியும். அவருடைய போதனைகள் நம் வாழ்க்கையும் ஆத்மாவும் என்பதில் சந்தேகமில்லை, அவற்றை நாம் அவற்றை முழுமையாகப் படியுங்கள் முழுமையாகப் படிக்கும்போது ஸ்ரீல பிரபுபாதரின் இருப்பை பல ஆழமான வழிகளில் உணர்ந்து அனுபவிக்க முடியும்.

பத்து மில்லியன் ஆச்சார்யர்கள்


உங்களுக்கு இப்போது பத்தாயிரம் கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை நாம் ஒரு லட்சமாக விரிவாக்குவோம். அது தேவை. பின்னர் ஒரு லட்சத்தை மில்லியனாகவும், மில்லியனை பத்து மில்லியனாகவும் ஆக்குவோம். எனவே ஆச்சார்யாவின் பற்றாக்குறை இருக்காது, மேலும் மக்கள் கிருஷ்ண உணர்வை மிக எளிதாக புரிந்துகொள்வார்கள். எனவே அந்த அமைப்பை உருவாக்குங்கள். பொய்யாகத் துடிக்க வேண்டாம். ஆச்சார்யாவின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, உங்களை சரியான, முதிர்ச்சியுள்ளவராக மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்னர் மாயையை எதிர்த்துப் போராடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஆம். ஆச்சார்யர்கள், அவர்கள் மாயையின் நடவடிக்கைகளுக்கு எதிராக போரை அறிவிக்கிறார்கள். 6 ஏப்ரல் 1975 ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்த உரையில் கூறியது,


கருத்து

ஸ்ரீல பிரபுபாதரின் இந்தத் தொலைநோக்குக் பார்வை அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது - கிருஷ்ண உணர்வை மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கான சரியான திட்டம் இது. ஸ்ரீல பிரபுபாதரின் பத்து மில்லியன் அதிகாரபூர்வ சிக்சா-சீடர்கள் எங்கள் ஸ்தாபக-ஆச்சார்யரின் அறிவுறுத்தல்களை தாழ்மையுடன் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள், எப்போதும் முழுமை மற்றும் முதிர்ச்சிக்காக முயற்சி செய்கிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் அந்த அமைப்பை உருவாக்குங்கள் என்று தெளிவாகக் கூறுகிறார். "" "இந்த பார்வையை நிறைவேற்ற வாணிபீடியா உற்சாகமாகப் பணிசெய்கிறது.

கிருஷ்ண உணர்வு எனும் விஞ்ஞானம்

பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில், கிருஷ்ண உணர்வு எனும் விஞ்ஞானம் அறிவு அனைத்துக்கும் அரசன் என்றும், அனைத்து ரகசிய விஷயங்களுக்கும் அரசன் என்றும், ஆழ்நிலை உணர்தலின் உச்ச அறிவியல் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண உணர்வு என்பது புலன் உணர்வுக்கு அப்பார்ப்பட்ட விஞ்ஞானம், இது கடவுளுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் ஒரு நேர்மையான பக்தருக்கு ஏற்படலாம். கிருஷ்ண உணர்வு என்பது உலர்ந்த வாதங்களாலோ கல்வித் தகுதிகளாலோ அடையப்படுவதில்லை. கிருஷ்ண உணர்வு என்பது இந்து, கிறிஸ்தவ, பௌத்த, இஸ்லாம் நம்பிக்கை போன்ற நம்பிக்கை அல்ல, அது ஒரு அறிவியல். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை கவனமாகப் படிப்பவர், கிருஷ்ண உணர்வின் மிக உயர்ந்த அறிவியலை உணர்ந்து, அதன் உண்மையான நன்மையை உணர்ந்து மற்றவருக்குப் பரப்புவதற்கு அதிக உத்வேகம் அளிப்பார்.

பகவான் சைதன்யரின் சங்கீர்த்தன இயக்கம்

பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு சங்கீர்த்தன இயக்கத்தின் தந்தையும் நிறுவனரும் ஆவார். சங்கீர்த்தன இயக்கத்திற்காக தன் உயிர் பணம் அறிவு சொற்கள் இவற்றை தியாகம் செய்து யாரொருவர் அவரை வணங்குகிறாரோ அவரை பகவான் கண்டுகொண்டு ஆசி வழங்குகிறார். மற்ற அனைவரும் அறிவற்றவர்களாகவே கருதப்படுவர். ஏனெனில் அனைத்து யாகத்திற்காகவும் செலவழிக்கப்படும் சக்தி களிலேயே சங்கீர்த்தன இயக்கத்திற்காக செய்யப்படும் யாகமே மிகவும் போற்றுதலுக்குரியது. கிருஷ்ண பக்தி இயக்கம் முழுவதுமே ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்தாபித்த சங்கீர்த்தன இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே சங்கீர்த்தன இயக்கத்தின் மூலமாக முழு முதற் கடவுளை உணர முயற்சிப்பவர் அனைத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்வார். அவரே சுமிதஸ் - போதுமான அறிவை உடையவர் எனப்படுவார்.

மனித சமுதாயத்தை மீண்டும் ஆன்மிக மயமாக்குதல்

மனித சமுதாயம் தற்போது மறதி என்னும் இருளில் மூழ்கி விடவில்லை. பௌதீக வசதிகள் கல்வி பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உலகம் முழுவதுமே மிக விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் இந்த சமூக அமைப்பில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு நெருடல் இருந்த வண்ணமே இருக்கிறது. அதனால் சிறுசிறு பிரச்சனைகளுக்கு கூட பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் எழுகின்றன. மனித சமூகம் அமைதி நட்பு வளமை இவற்றை பொதுக் காரணமாகக் கொண்டு எவ்வாறு இணையும் என்று அறிந்து வழி கோலுவது இப்போதைய பெரும் தேவையாக உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் இந்த தேவையை பூர்த்தி செய்கிறது ஏனெனில் மனித சமுதாயத்தை முழுவதுமாக மீண்டும் ஆன்மீக மயமாக்குதல் என்பதின் கலாச்சார விளக்கம் அதுவே. வெகுஜன மக்கள், பொதுவாக, நவீன அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் தலைவர்களின் கைகளில் கருவிகளேயாவர். தலைவர்களின் இதயத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படுமானால், நிச்சயமாக உலக சூழ்நிலையில் ஒரு தீவிர மாற்றம் இருக்கும். உண்மையான கல்வியின் நோக்கம் தன்னை உணர்தல், ஆன்மாவின் ஆன்மீக விழுமியங்களை உணர்தலாக இருக்கவேண்டும். உலகின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்மீகப்படுத்த அனைவரும் உதவ வேண்டும். இத்தகைய செயல்களால், செய்பவர் மற்றும் செய்யப்படும் செயல் இரண்டுமே ஆன்மீக ஊட்டம் பெற்று இயற்கையின் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது.

வாணி பீடியாவின் தொலைநோக்கு கொள்கை அறிக்கை

  • ஸ்ரீல பிரபுபாதர் தொடர்ந்து உலகளாவிய அளவில் கிருஷ்ணபக்தி விஞ்ஞானத்தை அனைத்து மொழிகளிலும் பிரசங்கம் செய்யவும் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.
  • பல்வேறு கோணங்களில் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து விரிவாக தொகுப்பது.
  • ஸ்ரீல பிரபுபாதரின் வாணியை எளிய முறையில் அணுகக்கூடிய முறையிலும் புரிந்துகொள்ளக்கூடிய முறையிலும் அளிப்பது
  • விரிவான கருப்பொருள் சார்ந்த ஆராய்ச்சிக்கான களஞ்சியத்தை ஏற்படுத்தி ஸ்ரீல பிரபுபாதரின் வாணியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகம் எழுதுவதற்கு வழிகோலுவது.
  • ஸ்ரீல பிரபுபாதரின் வாணிக்குள் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களுக்கான பாடத்திட்ட ஆதாரங்களை வழங்குவது.
  • ஸ்ரீல பிரபுபாதரின் நேர்மையான சிஷ்யர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரது வாணியிருந்து வழிகாட்டுதல்களை எடுத்துக் கொள்ளவும் அவரை அனைத்து நிலைகளிலும் பிரதிபலிக்கும் வண்ணம் நன்கு படித்து அறிந்து கொள்ளவும் அவரது வாணியை முழுவதுமாக புரிந்து கொள்ள வலியுறுத்துவது.
  • மேற்கூறிய அனைத்தையும் அடைவதற்கான நோக்கத்துடன் உலக அளவில் ஒத்துழைக்க வேண்டி அனைத்து நாடுகளிலிருந்தும் ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றுவோரை ஈர்ப்பது.

வாணிபீடியாவை கட்டுவதற்கு எது எங்களை ஊக்குவிக்கிறது?

  • நாங்கள் ஏற்றுக் கொள்வது:
  • ஸ்ரீல பிரபுபாதர் தூய பக்தர். உயிர் வாழிகளை இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். அவரது போதனைகளில் காணப்படும் பரம்பொருளுக்கான ஈடுஇணையற்ற விளக்கங்களே இந்த நியமனத்தை நிரூபிக்கிறது.
  • நவீன யுகத்தில் வைஷ்ணவ சித்தாந்தத்தை இதைவிட அருமையாக எடுத்துச் சொல்லும் வல்லுநரோ தற்கால உலகை உள்ளது உள்ளபடியே விளக்கும் சமூக விமர்சகரோ ஸ்ரீல பிரபுபாதரைத் தவிர வேறு எவரும் இல்லை.


  • வருங்கால சந்ததியினரில் வரும் கோடிக்கணக்கான அவரது சீடர்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளே முதன்மையான அடைக்கலம்.
  • ஸ்ரீல பிரபுபாதர் தனது போதனைகள் வெகுவாக பரவ வேண்டும் என்றும் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.
  • கொள்கை சார்ந்த அணுகுமுறையினால் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் அதனை ஆராய்ந்து கண்டுபிடித்து முழுவதுமாக தொகுப்பது மிகுந்த மதிப்பை கொடுக்கும்.


  • ஸ்ரீல பிரபுபாதர் இன் போதனைகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் மொழிபெயர்ப்பது அவரை அந்த மொழி பேசப்படும் நாட்டில் நித்தியமாக வாசம் செய்ய அழைப்பதற்கு சமமாகும்.
  • ஸ்ரீல பிரபுபாதர் இப்போது இல்லாதபடியால் இந்த மாபெரும் சேவையை செய்வதற்கு பல வாணி சேவகர்கள் அவருக்கு துணை புரிய வேண்டும்.

ஆகவே, ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் காணப்படும் சரியான ஞானம் மற்றும் உணர்தல்களைப் பரவலாக விநியோகிப்பதற்கும் சரியான புரிதலுக்கும் ஒரு உண்மையான சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவை மகிழ்ச்சியுடன் செய்யப்பட வேண்டும். அது மிகவும் எளிது தான். வாணிபீடியாவின் நிறைவு பெறுவதிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரே விஷயம் நேரம், இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்தர்களால் வழங்கப்பட வேண்டிய பல மணிநேர புனித வாணிசேவா.


என் குருமஹராஜருக்கு ஆற்றும் கடமையாக எண்ணி நான் செய்யும் பணிவான சேவையைப் பாராட்டும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைத்து செயலாற்றும் படி என் சிஷ்யர்களையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் நமது பணி சீராக முன்னேறும் என்பதில் ஐயமில்லை. – தாமல் கிருஷ்ண தாஸுக்கு ஸ்ரீல ப்ரபுபாதர் எழுதிய கடிதம் (GBC) - 14 August, 1971

ஸ்ரீல பிரபுபாதரின் மூன்று இயற்கையான நிலைகள்

ஸ்ரீல பிரபுபாதரின் திருவடிகளில் அடைக்கலம் புகும் கலாசாரத்தையே, ஸ்ரீல பிரபுபாதர் பற்றிய இந்த மூன்று நிலைகளையும் அவர் தம் சீடர்கள் தங்கள் உள்ளத்தில் எழுச்சி பெறச் செய்வதன் மூலமே உணர்வர்.

ஸ்ரீல பிரபுபாதரே நமது ஒப்புயர்வற்ற சிக்ஷா குரு

  • ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அவருடைய போதனைகளுக்குள்ளேயே அவரது சாநித்யத்தையும் புகலிடத்தையும் தனித்தனியாகவும் சரி, ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளும் போதும் சரி அனுபவிக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரை நம்முடைய வழிகாட்டும் மனசாட்சியாக ஏற்று வாழக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அவருடன் உறுதியான உறவை ஏற்படுத்துகிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரிடமிருடைய பிரிவை உணரும் பக்தர்களை அவருடைய சாநித்யத்தை அவருடைய வாணியிலேயே தேடி அதில் தஞ்சம் அடைவதை நாம் ஊக்குவிக்கிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் இரக்கத்தை அவரது தொண்டர்கள் - அவரிடன் தீட்சை பெறுவோர் மற்றும் அவரைப் பின்தொடர்பவோர் உட்பட அனைவருடனும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்,.
  • ஸ்ரீல பிரபுபாதரே நமது ஒப்புயர்வற்ற சிக்ஸா-குரு என்ற நிலைப்பாட்டின் உண்மையையும், அவர் பிரிந்த பின்பும் அவருடனான நம்முடைய சிஸ்ய உறவை பக்தர்களுக்கு நாம் கற்பிப்போம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் நிலைநிறுத்த சிக்ஷை அதிகாரமுள்ள சீடர்களின் பாரம்பரியத்தை நாங்கள் நிறுவுகிறோம்.

இஸ்கானின் ஸ்தாபக ஆச்சார்யர் ஸ்ரீல பிரபுபாதர்

  • இஸ்கான் உறுப்பினர்களை அவருடன் இணைக்கவும் உண்மையாக வைத்திருக்கவும் முதன்மை உந்து சக்தியாக அவரது வாணியை நாங்கள் பரிந்துரைக்கிறோம், இதனால் ஊக்கமும், உற்சாகமும், உறுதியும் கொண்டு அவரது இயக்கத்தை அவர் விரும்பிய வண்ணம் இன்றும் எதிர்காலத்திலும் கொண்டுசெல்ல வழிசெய்கிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் மற்றும் அவரது பிரசங்க உத்திகளை மையமாகக் கொண்ட வைணவ பிராமண தரங்களின் நிலையான வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம் - ஒரு "வாணி-கலாச்சாரம்."
  • இஸ்கான் ஸ்தாபக-ஆச்சார்யராக ஸ்ரீல பிரபுபாதரின் நிலைப்பாட்டின் உண்மையையும் அவருக்கும் அவரது இயக்கத்திற்கும் நாம் செய்யவேண்டிய சேவையின் முக்கியத்துவத்தையும் நாங்கள் பக்தர்களுக்குக் கற்பிக்கிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர் உலக ஆச்சார்யர்

  • ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து சபைகளிலும் அவரது போதனைகளின் சமகால பொருத்தத்தை நிலநாட்டுவதன் மூலம் உலக ஆச்சார்யராக ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக அந்தஸ்தின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை நாங்கள் அதிகரிக்கிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்தும் கலாச்சாரத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம், இதன் விளைவாக உலக மக்கள் கிருஷ்ண உணர்வு செயல்களில் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள்.
  • ஸ்ரீல பிரபுபாதர் கட்டிய வளாகத்தில், உலகம் முழுவதும் அவருடைய வாணியை அஸ்திவாரமாகவும், கூரையாகவும் கொண்டு வாழமுடிவதால், அதுவே புகலிடம், ஆஷ்ரயவாக இருந்து அந்த வீட்டையே பாதுகாக்கிறது.

ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலைப்பாட்டினை நிலைநிறுத்துவதின் முக்கியத்துவம்

  • நமது இஸ்கான் சமுதாயத்திற்கு ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலைப்பாட்டை அவரைப் பின்பற்றுபவர்களுடனும் அவரது இயக்கத்திற்குள்ளும் எளிதாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் கல்வி முயற்சிகள், அரசியல் வழிமுறைகள் மற்றும் சமூக கலாச்சார முறைகள் தேவை. இது தானாகவோ அல்லது விருப்பப்பட்டுவிட்டாலோ நடந்துவிடாது. அவரது தூய இதயம் படைத்த பக்தர்கள் வழங்கும் புத்திசாலித்தனமான, ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகளால் மட்டுமே அது சாத்தியம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலையை அவரது இயக்கத்திற்குள் மறைக்கும் ஐந்து முக்கிய தடைகள்:
* 1. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அறியாமை - அவர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், ஆனால் அவை இருப்பதை நாம் அறியவில்லை.
* 2. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் அலட்சியம் - அறிவுறுத்தல்கள் இருப்பதை அறிவோம், ஆனால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம்.
* 3. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைத் தவறாகப் புரிந்துகொள்வது - நாம் அவற்றை உண்மையாகப் பயன்படுத்துகிறோம், ஆனால் நம்முடைய அலட்சியத்தினாலோ முதிர்ச்சியின்மையினாலோ, அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
* 4. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் நம்பிக்கை இல்லாமை - நம் ஆழ்மனதில் அதனை நாம் முழுமையாக ஏற்கவில்லை, அவற்றை கற்பனாவாதமாக கருதுகிறோம், "நவீன உலகத்திற்கு" யதார்த்தமானதாகவோ அல்லது நடைமுறையாகவோ இல்லை.
* 5. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுடன் போட்டியிடுகிறோம் - முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஸ்ரீல பிரபுபாதர் அறிவுறுத்தியதை விட முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்கிறோம், அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களையும் நம்முடன் செல்ல எத்தனிக்கிறோம்.

கருத்து

ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் பற்றிய நமது அறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த தடைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஸ்ரீல பிரபுபாதரின் வாணியில் ஆழமாக வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான தீவிரமான தலைமைத்துவ உறுதிப்பாட்டால் தூண்டப்படுவதால் மட்டுமே இது வெற்றி பெறும். ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலை அனைத்து தலைமுறை பக்தர்களுக்கும் தானாகவே புரியும்படியாக அமையும்.

பக்தர்களே ஸ்ரீல பிரபுபாதரின் கை கால்கள், இஸ்கான் அவரது உடல், அவரது வாணியே அவரது ஆன்மா



  • புத்தகத்தின் அட்டைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குங்கள், இதனால் அவர்கள் உள்ளே இருக்கும் அறிவை தானாகவே வாசிப்பார்கள். அட்டைப்படங்கள் மனம் மற்றும் புலன்களைப் போன்றவை, புத்தகத்தின் உள்ளடக்கங்கள் ஆன்மா.

ஸ்ரீல பிரபுபாதர் அமோகா தாஸுக்கு எழுதிய கடிதம் (டிபி), 22 மே 1972



  • நாம் என்ன செய்தாலும், அது கிருஷ்ணரிடமிருந்து தொடங்கி, நம்மிடம் இருக்கும் குரு பரம்பரை அமைப்பில் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நம்முடைய அன்பான ஆர்வம், உடல் பிரதிநிதித்துவத்தை விட கருத்தின் மீது அதிகமாக இருக்க வேண்டும். நாம் கருத்தை நேசித்து, ​​அவருக்கு சேவை செய்யும் போது, ​​தானாகவே தேகக்கூறின் மீதான நமது பக்தித் தொண்டு செய்யப்பட்டுவிடுகிறது. - ஸ்ரீல பிரபுபாதர் கோவிந்த தாசிக்கு எழுதிய கடிதம், 7 ஏப்ரல் 1970

கருத்து

நாங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் கைகால்கள். அவரது முழு திருப்திக்கு அவருடன் வெற்றிகரமாக ஒத்துழைக்க நாம் அவருடன் உணர்வு ரீதியாக ஐக்கியமாக இருக்க வேண்டும். இந்த அன்பான ஒற்றுமை, அவருடைய வாணியை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதிலிருந்தும், அதனை நம்பிப் பயிற்சி செய்வதிலிருந்தும் உருவாகிறது. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அனைவரும் உள்வாங்கிக் கொள்ளுமாறு செய்வதற்கான வெற்றிகரமான உத்தி, கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் செய்யும் போது அவரது போதனைகளை தைரியமாக மனதின் மைய்யத்தில் வைப்பதே ஆகும். இந்த வழியில், ஸ்ரீல பிரபுபாதாவின் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் செழிக்க முடியும், மேலும் அவரவர் சேவைகளில் இஸ்கானை ஒரு திடமான அமைப்பாக மாற்ற முடியும். இவ்வாறு உலகை முழுமையான பேரழிவிலிருந்து காப்பாற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். பக்தர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஜிபிசி வெற்றி பெறுகிறது, இஸ்கான் வெற்றி பெறுகிறது, உலகம் வெல்கிறது, ஸ்ரீல பிரபுபாதர் வெற்றி பெறுகிறார், பகவான் சைதன்யர் வெற்றி பெறுகிறார். தோல்வியுற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.

குரு பரம்பரையின் போதனைகளை பரப்புவதற்கு

1486 உலகுக்குக் கிருஷ்ண பக்தியைக் கற்பிப்பதற்காக சைதன்ய மஹாபிரபு தோன்றுகிறார் – 534 ஆண்டுகளுக்கு முன்பு

1488 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு சனாதன கோஸ்வாமி தோன்றுகிறார் – 532 ஆண்டுகளுக்கு முன்பு

1489 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ரூப கோஸ்வாமி தோன்றுகிறார் – 531 ஆண்டுகளுக்கு முன்பு

1495 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ரகுநாத கோஸ்வாமி தோன்றுகிறார் – 525 ஆண்டுகளுக்கு முன்பு

1500 இயந்திர அச்சகங்கள் ஐரோப்பா முழுவதும் புத்தகங்களின் விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொடங்குகின்றன – 520 ஆண்டுகளுக்கு முன்பு

1513 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ஜீவ கோஸ்வாமி தோன்றுகிறார் – 507 ஆண்டுகளுக்கு முன்பு

1834 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு பக்திவிநோத தாகூரர் தோன்றுகிறார் – 186 ஆண்டுகளுக்கு முன்பு

1874 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு பக்திசித்தாந்த ஸரஸ்வதி தோன்றுகிறார் – 146 ஆண்டுகளுக்கு முன்பு

1896 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ஸ்ரீல பிரபுபாதர் தோன்றுகிறார் – 124 ஆண்டுகளுக்கு முன்பு

1914 பக்தி ஸிந்தாந்த ஸரஸ்வதி "பிருஹத் ம்ருதங்க" என்னும் சொற்தொடரைப் புனைகிறார் – 106 ஆண்டுகளுக்கு முன்பு

1922 ஸ்ரீல பிரபுபாதா முதன்முறையாக பக்திசித்தாந்த சரஸ்வதியை சந்தித்து உடனடியாக ஆங்கில மொழியில் பிரசங்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் - 98 ஆண்டுகளுக்கு முன்பு

1935 ஸ்ரீல பிரபுபாதா புத்தகங்களை அச்சிடுவதற்கான வலியுறுத்தல்களைப் பெறுகிறார் – 85 ஆண்டுகளுக்கு முன்பு

1944 பேக் டு காட்ஹெட் பத்திரிக்கையை ஸ்ரீல பிரபுபாதர் தொடங்குகிறார் – 76 ஆண்டுகளுக்கு முன்பு

1956 புத்தகம் எழுதுவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் விருந்தாவனத்திற்கு இடம் பெயற்கிறார் – 64 ஆண்டுகளுக்கு முன்பு

1962 ஸ்ரீல பிரபுபாதர் தனது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாகத்தை பிரசுரிக்கிறார் - 58 ஆண்டுகளுக்கு முன்பு

1965 தன் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு ஸ்ரீல பிரபுபாதர் மேற்கத்திய நாடுகளை அடைகிறார் – 54 ஆண்டுகளுக்கு முன்பு

1968 ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை உண்மை உருவில் புத்தகத்தின் சுருக்கத்தை வெளியிடுகிறார் – 52 ஆண்டுகளுக்கு முன்பு

1972 ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை உண்மை உருவில் புத்தகத்தின் முழுமையான பதிப்பை வெளியிடுகிறார் – 48 ஆண்டுகளுக்கு முன்பு

1972 ஸ்ரீல பிரபுபாதர் தன் புத்தகங்களை வெளியிட BBT யை நிறுவுகிறார் – 48 ஆண்டுகளுக்கு முன்பு

1974 ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் அவரது புத்தகங்களை விநியோகிப்பதில் முனைப்பாக ஈடுபடுகின்றனர் – 46 ஆண்டுகளுக்கு முன்பு

1975 ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை எழுதி முடிக்கிறார் – 45 ஆண்டுகளுக்கு முன்பு

1977 ஸ்ரீல பிரபுபாதர் பேசுவதை நிறுத்திவிட்டு தனது வாணியை நம் பொறுப்பில் விட்டுச் செல்கிறார் – 43 ஆண்டுகளுக்கு முன்பு

1978 பக்தி வேதாந்தக் காப்பகம் நிறுவப்படுகிறது – 42 ஆண்டுகளுக்கு முன்பு

1986 உலகின் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட பொருள் ஒரு நபருக்கு 1 சிடி-ரோம் விகிதம் ஆகும் – 34 ஆண்டுகளுக்கு முன்பு

1991 உலகளாவிய வலை தளம் (ப்ருஹத்-ப்ருஹத்-ப்ருஹத் ம்ருதங்க) நிறுவப்படுகிறது – 29 ஆண்டுகளுக்கு முன்பு

1992 பக்தி வேதாந்த வேதா பேஸின் முதல் பதிப்பு 1.0 உருவாக்கப்படுகிறது – 28 years ஆண்டுகளுக்கு முன்பு

2002 டிஜிட்டல் காலம் வருகிறது - உலகளாவிய டிஜிட்டல் சேமிப்பு அனலாக் முறையை முந்துகிறது – 18 ஆண்டுகளுக்கு முன்பு

2007 உலகின் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட விஷயங்கள் ஒரு நபருக்கு 61 சிடி-ரோம் வீதம் 427 பில்லியன் சிடி-ரோம்களாகிறது (முழுவதுமாக). – 13 ஆண்டுகளுக்கு முன்பு

2007 ஸ்ரீல பிரபுபாதரின் வாணி கோவிலான வாணிபீடியா கட்டுமானம் தொடங்கியது – 13 ஆண்டுகளுக்கு முன்பு

2010 ஸ்ரீல பிரபுபாதரின் உண்மையான கோவில், வேதக் கோளரங்கக் கோவில் கட்டுமானப்பணி ஸ்ரீதாம் மாயாபூரில் தொடங்குகிறது – 10 ஆண்டுகளுக்கு முன்பு

2012 1,906,753 மேற்கோள்கள், 108,971 பக்கங்கள் 13,946 பகுதிகளை வாணிபீடியா அடைகிறது – 8 ஆண்டுகளுக்கு முன்பு

2013 48 வருடத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் 500,000,000 புத்தகங்கள் இஸ்கான் பக்தர்களால் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன - ஒரு நாளைக்கு சராசரியாக 28,538 புத்தகங்கள் - 7 ஆண்டுகளுக்கு முன்பு

2019 மார்ச் 21, கௌர பூர்ணிமா தினத்தன்று மத்திய ஐரோப்பிய நேரப்படி சரியாக 7.15க்கு, வாணிபீடியா பக்தர்களைத் தங்களுடன் வரவேற்று இணையச் செய்து ஸ்ரீல பிரபுபாதரின் வாணியை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தத் தொடங்கி 11 வருடங்கள் முடிவடைந்ததைக் கொண்டாடியது. வாணிபீடியா தற்போது 45,588 பிரிவுகளையும், 282,297 பக்கங்களையும், 2,100,000க்கும் மேற்பட்ட மேற்கோள்களையும் 93 மொழிகளில் வழங்குகிறது. 1,220 மேற்பட்ட பக்தர்கள் வழங்கிய 295,000 மணிநேரத்திற்க்கும் மேற்பட்ட வாணி சேவையினாலேயே இது சாத்தியமானது. ஸ்ரீல பிரபுபாதரின் வாணி கோவிலை கட்டிமுடிக்க இன்னும் வெகு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் நாம் இவ்வுயரிய நோக்கத்திற்காக இன்னும் அதிக அளவில் பக்தர்களை அழைத்தவண்ணம் இருக்கிறோம்.

கருத்து

நவீன கால கிருஷ்ண பக்தி இயத்தின் கீழ் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம் செயல்படுத்தப்படுவது பக்தித் தொண்டு ஆற்றுவதற்கான ஆனந்தமயமான காலம்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான ஸ்ரீல பிரபுபாதர், தன்னுடைய மொழிபெயர்ப்புக்கள், பக்தி வேதாந்தப் பொருளுரைகள், உபன்யாசங்கள், உரையாடல்கள், கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் உலக அளவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுவே மனித சமுதாயத்தை மறுபடியும் ஆன்மீகமயமாக்குவதற்கான அடிக்கல்.

வாணி, தனிப்பட்ட உறவு மற்றும் பிரிவில் சேவை - மேற்கோள்கள்

  • 1936ல் என் குருமஹராஜர் மறைந்தார், அதன் பின், 1965ல் 30 வருடங்களுக்குப் பிறகு நான் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன். அதனால் என்ன? நான் என் குரு மஹராஜரின் அருளைப் பெறுகிறேன். அதுவே வாணி. என் குருவும் இப்போது இல்லை, ஆனால் அவருடைய வாணியை, சொற்களை பின்பற்றினாலே நமக்கு உதவி கிடைத்துவிடும். – ஸ்ரீல பிரபுபாதரின் காலை நடைப்பயிற்சி உரையாடல்கள், 21 ஜூலை 1975


  • குரு மஹராஜரின் ரூபம் மறைந்துவிட்ட போது அவருடைய வாணி மிக முக்கியமானது. என் குரு மஹராஜரான ஸரஸ்வதி கோஸ்வாமி தாகூரர், இப்போது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய ஆறிவுறுத்தல்களை பின்பற்றப் பாடுபடுவதால் நான் அவருடைய பிரிவை உணர்வதே இல்லை. இந்த அறிவுறுத்தல்களை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். – கரந்தர தாசருக்கு (GBC) ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 22 ஆகஸ்ட் 1970


  • ஆரம்பத்தில் இருந்தே நான் அருவவழிபாட்டுக்காரர்களுக்கு கடும் எதிராக இருந்தேன், எனது புத்தகங்கள் அனைத்திலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆக எனது வாய்வழி அறிவுறுத்தலும் எனது புத்தகங்களும், அனைத்தும் உங்கள் சேவையில் உள்ளன. இப்போது நீங்கள் ஜிபிசி அவர்களைக் கலந்தாலோசித்து தெளிவான மற்றும் வலுவான யோசனையைப் பெறுங்கள், பின்னர் எந்த இடையூறும் ஏற்படாது. அறியாமை காரணமாக தொந்தரவு ஏற்படுகிறது; அறியாமை இல்லாத இடத்தில், தொந்தரவு இல்லை. – ஹயக்கிரீவ தாஸருக்கு (GBC) ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 22 ஆகஸ்டு 1970


  • குருவுடனான தனிப்பட்ட தொடர்பைப் பொறுத்தவரையில், நான் எனது குரு மகாராஜருடன் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே இருந்திருக்கிறேன், ஆனால் நான் ஒருபோதும் அவரது சங்கத்தை விட்டு வெளியேறவில்லை, ஒரு கணம் கூட இல்லை. அவருடைய அறிவுறுத்தல்களை நான் பின்பற்றி வருவதால், நான் ஒருபோதும் பிரிவை உணரவில்லை. – ஸ்ரீல பிரபுபாதர் சத்யதன்ய தாஸருக்கு எழுதிய கடிதத்தில், 20 பிப்ரவரி 1972



  • பிரிவிலும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் 1936 முதல் எனது குரு மகாராஜாவிடமிருந்து பிரிந்திருக்கிறேன், ஆனால் நான் எப்போதும் அவருடன் இருக்கிறேன், அவருடைய வழிநடத்துதலின் படி நான் வேலை செய்கிறேன். ஆகவே, கிருஷ்ணரை திருப்திப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அந்த வகையில் பிரிவினை உணர்வுகள் ஆழ்நிலை ஆனந்தமாக மாறும். – ஸ்ரீல பிரபுபாதர் உத்தவ தாஸருக்கு (இஸ்கான் பதிப்பகம்) எழுதிய கடிதம், 3 மே 1968

கருத்து

ஸ்ரீல பிரபுபாதர் பின்வரும் தொடர் அறிக்கைகளில் பல வெளிப்படையான உண்மைகளை வழங்குகிறார்.

  • ஸ்ரீல பிரபுபாதரின் தனிப்பட்ட வழிகாட்டுதல் எப்போதும் இங்கே உள்ளது.
  • ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பிரிவாற்றாமையை உணரும் போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
  • ஸ்ரீல பிரபுபாதர் உயிரோடு இல்லாத நிலையில் அவரது வாணிசேவா மிகவும் முக்கியமானது.
  • ஸ்ரீல பிரபுபாதர் தனது குரு மகாராஜருடன் மிகக் குறைவாகவே தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தார்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் வாய்மொழி அறிவுறுத்தல், அத்துடன் அவரது புத்தகங்கள் அனைத்தும் நம் சேவையில் உள்ளன.
  • ஸ்ரீல பிரபுபாதரிடம் நாம் கொள்ளும் பிரிவாற்றாமை உணர்வு ஆழ்நிலை ஆனந்தமாக மாறுகிறது.
  • ஸ்ரீல பிரபுபாதர் உயிரோடு இல்லாதபோது, ​​அவருடைய வாணியைப் பின்பற்றினால், அவருடைய உதவியைப் பெறலாம்.
  • ஸ்ரீல பிரபுபாதர் பக்திசித்தாந்த சரஸ்வதியின் சங்கத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ஒரு கணம் கூட.
  • ஸ்ரீல பிரபுபாதரின் வாய்மொழி அறிவுறுத்தல்களையும் அவரது புத்தகங்களையும் கலந்தாலோசிப்பதன் மூலம் தெளிவான மற்றும் வலுவான யோசனைகளைப் பெறுகிறோம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம், அவரிடமிருந்து பிரிக்கப்பட்டதாக (துண்டிக்கப்பட்டதாக) ஒருபோதும் உணர மாட்டோம்.
  • ஸ்ரீல பிரபுபாதர், அவரைப் பின்பற்றுபவர் அனைவரும் வலுவான சிஷ்யர்களாவதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ஊடகங்களைப் பயன்படுத்தி கிருஷ்ணரின் செய்தியைப் பரப்புதல்

  • எனவே பத்திரிகைகள் மற்றும் பிற நவீன ஊடகங்கள் மூலம் எனது புத்தகங்களை விநியோகிக்க உங்கள் ஏற்பாடுகளைத் தொடருங்கள், கிருஷ்ணர் நிச்சயமாக உங்கள் சேவையில் மகிழ்ச்சி அடைவார். கிருஷ்ணரைப் பற்றி சொல்ல தொலைக்காட்சி, வானொலி, திரைப்படங்கள் அல்லது எதுவாக இருந்தாலும் நாம் அனைத்தையும் பயன்படுத்தலாம்

– ஸ்ரீல பிரபுபாதர் பகவான்தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 24 நவம்பர் 1970



  • உங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைக் கூறும் அறிக்கைகளால் நான் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறேன். கிடைக்கக்கூடிய அனைத்து வெகுஜன ஊடகங்களையும் பயன்படுத்துவதன் மூலம் முடிந்தவரை நம் பிரசங்க நிகழ்ச்சிகளை அதிகரிக்க முயற்சிக்கவும். நாம் நவீன வைணவர்கள், கிடைக்கக்கூடிய எல்லா வழிகளையும் பயன்படுத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்வோம். – ஸ்ரீல பிரபுபாதர் ரூபானுக தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 30 டிஸம்பர் 1971


  • நான் என் அறையில் உட்கார்ந்து இருந்த படியே உலகத்தைப் பார்த்து பேசுவதை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமானால் நான் லாஸ் ஏஞ்சல்ஸ் விட்டுப் போகவே மாட்டேன். அதுவே உங்கள் L.A. கோவிலுக்கு மிகச் சிறப்பாக அமையும். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிகழ்ச்சிகள் மூலமாக உங்கள் நாட்டு ஊடகங்களை மூழ்கடிக்கும் உங்கள் திட்டம் கண்டு நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன் மேலும் அது உங்கள் கைகளில் நடைமுறையில் உருப் பெறுவது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். - ஸ்ரீல பிரபுபாதர் சித்தேஸ்வர தாஸருக்கும் கிருஷ்ணகாந்தி தாஸருக்கும் எழுதிய கடிதம், 16 பிப்ரவரி 1972



  • ஸ்ரீல பிரபுபாதாவின் போதனைகள் மற்றும் அவரது புத்தகங்களில் காணப்படும் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் ஒரு பெரும் கலைக்களஞ்சியமாக சரியான முறையில் ஒவ்வொரு தலைப்பாக தொகுப்பதற்கான உங்கள் முன்மொழிவைக் கேட்டு தெய்வத்திரு ஆச்சார்யர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

– சுபாநந்ததாஸருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 7 ஜூன் 1977

கருத்து

தனது குரு மகராஜரைப் பின்பற்றி பிரபுபாதர் அனைத்தையும் கிருஷ்ணர் சேவையாக செய்யும் கலையை அறிந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் உலகத்தை காணவும் உலகத்தோடு பேசவும் விரும்புகிறார்

  • ஊடகங்களை கிருஷ்ண பக்தி இயக்க நிகழ்ச்சிகளில் மூழ்கடிக்க ஸ்ரீல பிரபுபாதர் விரும்புகிறார்
  • அச்சு மூலமாகவும் மற்ற ஊடகங்கள் மூலமாகவும் தனது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ய வேண்டுமென்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்புகிறார்
  • ஒவ்வொரு தலைப்பாக அவரது அறிவுறுத்தல்களை கலைக்களஞ்சியமாக உருவாக்கும் திட்டம் கேட்டு ஸ்ரீல பிரபுபாதர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்
  • நமக்குக் கிடைத்திருக்கின்ற வெகுசன ஊடகங்கள் மூலமாக நம்முடைய பிரச்சாரங்களை வெகுவாக விரிவாக்க வேண்டும் என்று பிரபுபாதர் கூறுகிறார்.
  • நாம் நவீன வைணவர்கள் என்றும் நாம் மிகுந்த வலிமையுடன் அனைத்து வழிகளிலும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்
  • தொலைக்காட்சி வானொலி சினிமா எதுவாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி கிருஷ்ணரைப் பற்றி பேச வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்
  • வெகுஜன ஊடகங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதற்கு மிக முக்கியமான கருவியாக இருக்கக்கூடும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்.

நவீன ஊடகங்கள் நவீன வாய்ப்புகள்

1970களில் ஸ்ரீல பிரபுபாதருக்கு நவீன ஊடகம் வெகுஜன ஊடகம் என்பதெல்லாம் பதிப்பகம் வானொலி தொலைக்காட்சி மற்றும் சினிமா இவற்றை மட்டுமே குறித்தனர். அவர் சென்ற பிறகு வெகுஜன ஊடகத்தின் நிலப்பரப்பு பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்து இப்போது ஆண்ட்ராய்ட் போன்கள், மேகக் கணினி முறை மற்றும் சேமிப்பு,இ-புத்தக வாசிப்பாளர்கள், இ-வியாபாரம், உறவாடும் - விளையாடும் தொலைக்காட்சி, ஆன்லைன் பதிப்பாளர்கள், பாட்காஸ்ட் RSS ஃபீடுகள், சமூக வலைதளங்கள், ஸ்ட்ரீமிங் ஊடக சேவைகள், டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம், வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்ட பரிமாற்றம் மற்றும் வினியோக சேவைகள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.

பிரபுபாதரின் உதாரணத்தை மேற்கொண்டு நாமும் 2007ஆம் ஆண்டு முதல் ஸ்ரீல பிரபுபாதரின் வாணியைத் தொகுத்து முறைப்படுத்தி வகைப்படுத்தி பரப்புவதற்கு நவீன வெகுஜன ஊடக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம்.

  • உண்மையும் விலையற்றதுமான வலைதளம் ஒன்றை அமைத்து ஸ்ரீல பிரபுபாதரின் அறிவுறுத்தல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் செய்து அனைவரும் எளிதில் காணும் வண்ணமும், கீழ்கண்ட அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும் செய்வதே வாணிபீடியாவின் குறிக்கோள்.
• இஸ்கான் உபன்யாசகர்கள்
• இஸ்கான் தலைவர்கள் மற்றும் மேலாளர்கள்
• ஆன்மீக கல்வியினை கற்கும் பக்தர்கள்
• தங்கள் அறிவை ஆழம் ஆக்கிக் கொள்ள விரும்பும் பக்தர்கள்
• பாடத்திட்டம் செய்பவர்கள்
• ஸ்ரீல பிரபுபாதர் இடமிருந்து பிரிவை உணரும் பக்தர்கள்
• நிர்வாகத் தலைவர்கள்
• கல்வியாளர்கள்
• சமயக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
• எழுத்தாளர்கள்
• ஆன்மீக தேடல் உடையவர்கள்
• தற்கால சமூக பிரச்சனைகளில் அக்கறை உடையவர்கள்
• வரலாற்றாளர்கள்

கருத்து

ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும் தெரியும் வண்ணமும் செய்வதற்கு இன்னும் எத்தனையோ செய்யவேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த வலைதள தொழில்நுட்பம் நம்முடைய அனைத்து இறந்த கால வெற்றிகளையும் மிஞ்சுவதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

வாணிசேவை - ஸ்ரீல பிரபுபாதரின் வாணிக்காக நாம் செய்யும் புனித சேவை

நவம்பர் 14 1977 முதல் ஸ்ரீல பிரபுபாதர் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்ற வாணி என்றும் புதுமையாக நம்முடனேயே இருக்கிறது. இருப்பினும் இந்த போதனைகள் அவற்றின் தூய நிலையிலோ, பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலோ இல்லை. அவருடைய வாணியைப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் பரப்புவது அவருடைய சிஷ்யர்களுக்கான புனிதமான கடமை. எனவே நாம் இந்த வாணி சேவையை செய்வதற்கு உங்களை வரவேற்கிறோம்.


உலகெங்கிலும் எனது பணிகளைச் செய்ய நான் நியமித்த சில மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருப்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மேற்கொண்டுள்ள பணி மிகப் பெரியது. எனவே, நான் செய்வதையே செய்வது இந்தப் பணியை நிறைவேற்ற உங்களுக்கு பலம் அளிக்கும்படி கிருஷ்ணரிடம் எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். எனது முதல் வேலை பக்தர்களுக்கு சரியான அறிவைக் கொடுத்து பக்தி சேவையில் ஈடுபடுத்துவதேயாகும், அதனால் அது உங்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்காது, எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன். புத்தகங்களைப் படித்துப் பேசுங்கள், அதனால் மேலும் பல புதிய தெளிவுகள் பிறக்கும். நம்மிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிரசங்கம் செய்யப் போதுமான விஷயம் அதில் இருக்கிறது. – ஸ்ரீல பிரபுபாதர் சத்சுவரூப தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 16 ஜூன் 1972

ஜூன் 1972 ஸ்ரீல பிரபுபாதர் கூறினார் "நம்மிடம் பல புத்தகங்கள் உள்ளன" அதாவது நம்மிடம் "போதிய விஷயம் இருக்கிறது" ப்ரசங்கம் செய்ய "அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு." அப்போது 10 தலைப்புகள் மட்டுமே பதிப்பிடப்பட்டிருந்தன, அதன் பின்பு ஜூலை 1972 முதல் நவம்பர் 1977 வரை வெளியிடப்பட்ட புத்தகங்களை கணக்கெடுத்துப் பார்க்கும் போது நம்மிடம் இருக்கும் விஷயம் சுலபமாக 5,000 ஆண்டுகளுக்கு போதுமானதாக விரிவடையும். அவர் வாய்மொழியாய் கூறிய அறிவுறுத்தல்களையும் கடிதங்களையும் இதனுடன் கூட்டினால் விஷயங்கள் 10,000 ஆண்டுகளுக்கே போதுமானதாக விரிவடையக்கூடும். நாம் இந்த போதனைகள் அனைத்தையும் பலருக்கும் கிடைக்கும் வகையிலும் புரியும் வகையிலும் சீரிய முறையில் தயார் செய்வது இந்த முழு கால கட்டத்திலும் "பிரசங்கம் செய்வதற்குப்" பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர் சைதன்ய மகாபிரபுவின் செய்தியைப் பிரப்புவதற்கு முடிவில்லாத உற்சாகமும் உறுதியும் கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவரது வபு நம்மை விட்டு விலகிவிட்டது முக்கியமல்ல. அவர் தனது போதனைகளில் இருக்கிறார், டிஜிட்டல் தளம் வழியாக, அவர் உயிருடன் இருந்தபோது செய்ததை விட இப்போது இன்னும் விரிவாக பிரசாரம் செய்ய முடியும். பகவான் சைதன்யரின் கருணையை முழுமையாக நம்பி, ஸ்ரீல பிரபுபாதரின் வாணி-சேவையைத் தழுவிக்கொள்வோம், முன்பை விட அதிக உறுதியுடன், 10,000 வருட பிரசங்கத்திற்குத் தேவையான அவரது வாணியை திறமையாக தயார் செய்வோம்.

கடந்த பத்து ஆண்டுகளில் நான் கட்டமைப்பைக் கொடுத்துவிட்டேன், இப்போது நாம் பிரிட்டிஷ் பேரரசை விடப் பெரிதாகிவிட்டோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கூட நம்மைப் போல விரிவாக இல்லை. அவர்கள் உலகின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டிருந்தனர், நம் விரிவாக்கம் முடிவடையவில்லை. நாம் மேலும் மேலும் வரம்பற்ற முறையில் விரிவாக்க வேண்டும். ஆனால் ஸ்ரீமத்-பாகவதத்தின் மொழிபெயர்ப்பை நான் முடிக்க வேண்டும் என்பதை இப்போது நான் நினைவில் கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய பங்களிப்பு; நம் புத்தகங்கள் நமக்கு மரியாதைக்குரிய நிலையை வழங்கியுள்ளன. இந்த தேவாலயம் அல்லது கோவில் வழிபாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அந்த நாட்கள் போய்விட்டன. நிச்சயமாக, நம் உற்சாகத்தை உயர்த்தி வைத்திருப்பது அவசியம் என்பதால் கோயில்களை பராமரிக்க வேண்டும். வெறுமனே அறிவுத்திறனை மட்டும் வளர்த்தால் போதாது, நடைமுறை சுத்திகரிப்பு இருக்க வேண்டும்.

எனவே ஸ்ரீமத்-பகவதம் மொழிபெயர்ப்பை முடிக்க, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து என்னை மேலும் மேலும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் நிர்வகிக்க வேண்டியிருந்தால், புத்தக வேலையை என்னால் செய்ய முடியாது. இது ஆவணம், நான் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் நிதானமாக தேர்வு செய்ய வேண்டும், நான் நிர்வாகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் இதை என்னால் செய்ய முடியாது. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக ஏதேனும் கற்பனையை முன்வைக்கும் இந்த வஞ்சகர்களைப் போல நான் இருக்க முடியாது. எனவே எனது நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், ஜிபிசி, கோயில் தலைவர்கள் மற்றும் சன்யாசிகள் ஆகியோரின் ஒத்துழைப்பில்லாமல் இந்தப் பணி முடிக்கப்படாது. சிறந்த மனிதர்களை ஜிபிசியாகத் தேர்வு செய்துள்ளேன், ஜிபிசி, கோயில் தலைவர்களை அவமரியாதை செய்வது கூடாது. நீங்கள் இயல்பாகவே என்னைக் கலந்தாலோசிக்கலாம், ஆனால் அடிப்படைக் கொள்கை பலவீனமாக இருந்தால், காரியங்கள் எவ்வாறு தொடரும்? எனவே தயவுசெய்து நிர்வாகத்தில் எனக்கு உதவுங்கள், இதனால் உலகில் நிலைத்து நிற்கும் பங்களிப்பாக விளங்கக்கூடிய ஸ்ரீமத்-பாகவதத்தை முடிக்க எனக்கு அவகாசம் கிட்டும். – அனைத்து நிற்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 19 மே 1976

இங்கு ஸ்ரீல பிரபுபாதர் கூறுகையில், தனக்கு உதவியாக "தன்னுடைய நீடித்த பங்களிப்பை உலகுக்கு அளிக்க" "எனது நியமிக்கப்பட்ட உதவியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த பணி முடிக்கப்படாது." என்கிறார்."ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களே நமக்கு மரியாதைக்குரிய நிலையை வழங்கியுள்ளன," அவை "உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும்."

இத்தனை வருடங்களாக, ஸ்ரீல பிரபுபாதரின் வார்த்தைகளை திடமாகப் பற்றியிருந்த பக்தர்கள், புத்தக வினியோகஸ்தர்கள், உபன்யாசகர்கள் மற்றும் அவரது வாணியை ஏதோ ஒரு வழியில் பரப்பவோ பாதுகாக்கவோ தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல பக்தர்கள் பெரும் வாணி சேவை புரிந்துள்ளனர். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. பிரஹத்-பிரஹத்-பிரஹத் மர்தங்காவின் (உலகளாவிய வலை) தொழில்நுட்பங்கள் வழியாக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதரின் வாணியின் இணையற்ற வெளிப்பாட்டை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்க இப்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் திட்டம் என்னவென்றால் வாணிசேவாவில் ஒருங்கிணைந்து 2027 நவம்பர் 4 ஆம் தேதிக்குள் ஒரு வாணி கோவிலைக் கட்ட வேண்டும், அந்த நேரத்தில் நாம் அனைவரும் 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம். ஸ்ரீல பிரபுபாதரைப் பிரிந்து பணியாற்றியதில் 50 ஆண்டுகள் நிறைவேறியிருக்கும். இது ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பொருத்தமான அழகான அன்பளிப்பாகவும், அவரது அனைத்து எதிர்கால தலைமுறை பக்தர்களுக்கும் ஒரு மகத்தான பரிசாகவும் இருக்கும்.

உங்கள் அச்சகத்திற்கு ராதா பிரஸ் என்று பெயரிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. எங்கள் புத்தகங்கள் மற்றும் இலக்கியங்கள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் வெளியிடுவதில் உங்கள் ராதா பதிப்பகம் வளமாக இருக்கட்டும். இது மிகவும் நல்ல பெயர். ராதாராணி கிருஷ்ணரின் சிறந்த, மிகச்சிறந்த சேவையாளர், மற்றும் கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கான தற்போதைய தருணத்தில் அச்சிடும் இயந்திரம் மிகப்பெரிய ஊடகமாகும். எனவே, இது உண்மையில் ஸ்ரீமதி ராதராணியின் பிரதிநிதி. இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. – ஜய கோவிந்த தாசருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம் (புத்தக தயாரிப்பு மேலாளர்), 4 ஜூலை 1969

20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதியில், அச்சகம் பல குழுக்களுக்கும் வெற்றிகரமான பிரச்சாரத்திற்கான கருவிகளை வழங்கியது. கம்யூனிஸ்டுகள் தாங்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் இந்தியாவில் தங்கள் செல்வாக்கை எவ்வாறு பரப்பினர் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் கூறுவார். அது போல தனது புத்தகங்களை உலகம் முழுவதும் விநியோகிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வுக்காக ஒரு பெரிய பிரச்சார திட்டத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை வெளிப்படுத்த இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார்.

இப்போது, ​​21 ஆம் நூற்றாண்டில், ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிட்டது போல, தற்போதைய தருணத்தில், "கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கான மிகப் பெரிய ஊடகமாக" இணைய வெளியீடு மற்றும் விநியோகத்தின் அதிவேக இணையற்ற சக்தி பயன்படுத்தப்படலாம் என்பதில் ஐயமில்லை. வாணிபீடியாவில், இந்த நவீன வெகுஜன விநியோக மேடையில் சரியான பிரதிநிதித்துவத்திற்காக ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை நாங்கள் தயார் செய்கிறோம். ஜெர்மனியில் உள்ள தனது பக்தர்களின் ராதா அச்சகம் "உண்மையில் ஸ்ரீமதி ராதாராணியின் பிரதிநிதி" என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். அவ்வாறே அவர் வாணிபீடியாவை ஸ்ரீமதி ராதராணியின் பிரதிநிதியாகக் கருதுவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

பல அழகான வபு கோயில்கள் ஏற்கனவே இஸ்கான் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளன - இப்போது நாம் ஒரே ஒரு புகழ்பெற்ற வாணி கோவிலையாவது கட்டுவோம். வபு-கோயில்கள் இறைவனின் வடிவங்களின் புனித தரிசனங்களை வழங்குவது போல, வாணி கோயில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கியபடி இறைவன் மற்றும் அவரது தூய பக்தர்களின் போதனைகளின் புனித தரிசனத்தை வழங்கும். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் சரியான, வழிபாட்டு நிலையில் அமைந்திருக்கும் போது இஸ்கான் பக்தர்களின் பணி இயல்பாகவே வெற்றிகரமாக இருக்கும். இப்போது அவரது "நியமிக்கப்பட்ட உதவியாளர்கள்" அனைவருக்கும்அவரது வாணி-கோயிலைக் கட்டுவதற்கும், வாணி-பணியைத் தழுவுவதற்கும், முழு இயக்கத்தையும் பங்கேற்க ஊக்குவிப்பதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீதாம் மாயாப்பூரில் கங்கைக் கரையில் இருந்து உயர்ந்து வரும் பிரம்மாண்டமான மற்றும் அழகான வபு கோயில், பகவான் சைதன்யரின் கருணையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின் வாணி கோயிலும் அவரது இஸ்கான் பணியை வலுப்படுத்தி உலகம் முழுவதும் பரவச் செய்து, ஸ்ரீல பிரபுபாதாவின் இயல்பான நிலையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தமுடியும்.

வாணிசேவை - சேவை செய்வதற்கான நடைமுறை நடவடிக்கை

  • வாணிபீடியாவை நிறைவு செய்வது என்பது வேறு எந்தவொரு ஆன்மீக ஆசிரியரின் படைப்புகளுக்காகவும் இதுவரை யாரும் செய்திராத வகையில் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் வழங்கப்படுதலையே குறிக்கும். இந்த புனிதமான பணியில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வலை வழியாக மட்டுமே சாத்தியமாகும் அளவில் உலகிற்கு ஸ்ரீல பிரபுபாதருக்கு ஒரு தனித்துவமான வெளிப்பாட்டைக் கொடுப்போம்.
  • ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுக்கான முதன்மை பன்மொழிக் கலைக்களஞ்சியமாக வாணிபீடியாவை ஆக்குவதே எங்கள் விருப்பம். இது பல பக்தர்களின் நேர்மையான அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் ஆதரவோடு மட்டுமே சாத்தியம். இன்றுவரை, 1,220 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 93 மொழிகளில் வாணிசோர்ஸ் மற்றும் வாணிகோட்ஸ் மற்றும் மொழிபெயர்ப்புகளை உருவாக்குவதில் பங்கேற்றுள்ளனர். இப்போது வாணிகோட்களை நிறைவுசெய்து, வாணிபீடியா கட்டுரைகள், வாணிபுக்ஸ், வாணிமீடியா மற்றும் வாணிவர்சிட்டி பாடங்களை உருவாக்குவதற்கு பின்வரும் திறன்களைக் கொண்ட பக்தர்களிடமிருந்து எங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை:
• நிர்வாகம்
• தொகுத்தல்
• பாடத்திட்ட மேம்பாடு
• வடிவமைப்பு மற்றும் தளவமைப்பு
• நிதி
• மேலாண்மை
• பதவி உயர்வு
• ஆராய்ச்சி
• சேவையக பராமரிப்பு
• தள மேம்பாடு
• மென்பொருள் நிரலாக்கம்
• கற்பித்தல்
• தொழில்நுட்ப எடிட்டிங்
• பயிற்சி
• மொழிபெயர்ப்பு
• எழுதுதல்
  • வாணிசேவகர்கள் தங்கள் வீடுகள், கோயில்கள் மற்றும் அலுவலகங்களிலிருந்து தங்கள் சேவையை வழங்குகிறார்கள், அல்லது ஸ்ரீதாம் மாயாப்பூர் அல்லது ராதாதேஷில் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் எங்களுடன் முழுநேரமாகவும் சேரலாம்.

நன்கொடை

  • கடந்த 12 ஆண்டுகளாக வாணிபீடியாவுக்கு முதன்மையாக பக்திவேந்தா நூலக சேவைகளிலிருந்து புத்தக விநியோகத்தால் நிதியளிக்கப்பட்டுவந்தது. அதன் கட்டுமானத்தைத் தொடர, வாணிபீடியாவுக்கு BLS இன் தற்போதைய திறனைத் தாண்டி நிதி தேவைப்படுகிறது. முடிந்ததும், பல திருப்திகரமான பார்வையாளர்களின் சதவீதத்திலிருந்து கிட்டும் சிறிய நன்கொடைகளால் வாணிபீடியா தக்கவைக்கப்படும். ஆனால் இப்போதைக்கு, இந்த இலவச கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டங்களை முடிக்க, நிதி உதவியை வழங்கும் சேவை மிக முக்கியமானது.
  • வாணிபீடியாவின் ஆதரவாளர்கள் பின்வரும் வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்

ஆதரவாளர்: தான் விரும்பிய தொகையை நன்கொடையாக வழங்குபவர்.

ஆதரிக்கும் புரவலர்: ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 81 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.

நீடித்த புரவலர்: 9 மாதங்களுக்கு தலா 90 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 810 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.


வளர்ச்சி புரவலர்: 9 ஆண்டுகளுக்கு தலா 900 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 8,100 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.

அடித்தளப் புரவலர்: 9 ஆண்டுகளுக்கு தலா 9000 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 81,000 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.

  • நன்கொடைகள் ஆன்லைனில் பெறப்படும் அல்லது எங்கள் [email protected] என்ற பேபால் கணக்கின் மூலமும் பெற்றுக்கொள்ளப்படும். வேறு முறையைப் பயன்படுத்தவோ, நன்கொடை வழங்கும் முன்பு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ எங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

எங்கள் நன்றி - பிரார்த்தனை

எங்கள் நன்றி


ஸ்ரீல பிரபுபாதருக்கு நன்றி
சேவை செய்ய வாய்ப்பளித்தீர்
அளித்ததை சிக்கெனப்பற்றுவோம்
பற்றி உம்மை மகிழ்விப்போம்
மகிழட்டும் பல புண்ணியாத்மாக்கள்
ஆத்மாவைத் தொடும் உம் போதனைகளால்
போதனைகளே அவர்க்குப் புகலிடம்
அன்புள்ள ஸ்ரீல பிரபுபாதரே
எங்களை பலப்படுத்துங்கள்
உங்கள் வாணி கோவில் கட்ட
கட்டிமுடிக்க ஆவணங்களையும்
உம் சேவையில் அக்கறைகொண்ட
அண்டம் முழுவதுமுள்ள பக்தர்களை
களைந்தெடுத்து எமக்கனுப்புங்கள்
அனுப்பி எங்கள் பண்புகள் திறமைகள் ஏற்றி
ஏற்ற வெற்றியும் தாருங்கள்
அன்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ பஞ்ச தத்துவ
ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர்
ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள்
மற்றும் குரு மகராஜருக்கு
பிரியபக்தர்களாக நாம் ஆவதற்கு உதவுங்கள்
பக்தர்களின் ஆனந்தத்திற்காக
பிரபுபாதரின் கோக்கத்தில்
நாங்கள் தொடர்ந்து
புத்திசாலித்தனத்துடன் கூடிய
கடின உழைப்பு மேற்கொள்ள
அருள் புரியுங்கள்


இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டமைக்கு நன்றி!

கருத்து

ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீ ஸ்ரீ பஞ்ச தத்வ, மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர் ஆகியோரின் வலிமையான கிருபையால் மட்டுமே இந்த கடினமான பணியை நாம் முடிக்க முடியும். எனவே அவர்களின் கருணைக்காக நாம் தொடர்ந்து பிரார்திக்கிறோம்.


மற்ற ஆதாரங்கள்

hare kṛṣṇa hare kṛṣṇa - kṛṣṇa kṛṣṇa hare hare - hare rāma hare rāma - rāma rāma hare hare