"ஆக கிருஷ்ணர் இங்கே என்ன சொல்கிறார்? கர்ம-ஜம், கர்ம-ஜம் (BG 2.51), அதாவது 'செய்யும் எந்த செயலும் எதிர்காலத்தில் சுகத்தையோ துக்கத்தையோ தருகிறது. ஆனால் புத்திசாலித்தன்மாக, உன்னத உணர்வின் உதவியுடன் செயல்படும்போது, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி என்னும் பந்தத்தில் இருந்து விடுபடமுடியும் மேலும் அடுத்த பிறவியில்.... இது ஒரு பயிற்சிக்காலம், முழுவதுமாக பயின்ற பிறகு, அதன் விளைவு என்னவென்றால், இந்த உடலை நீக்கும் போது நீங்கள் என்னுடைய சாம்ராஜ்யத்தை அடைவது தான். ' த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (BG 4.9). ஆக இதுவே முழு செயல்முறை."
|