"தற்போது நாம் நம்முடைய பௌதிக நிலையில் இருக்கின்றோம், நம்முடைய கருத்துக்களை நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் அதனால் ஏமாற்றப்பட்டு வருகிறோம், ஏனெனில் மனதின் வேலையே ஒன்றை உருவாக்கி அதனை பின்பு மறுப்பது தான். மனம் ஒன்றை நினைக்கும், 'சரி நாம் இதை செய்யலாம்' என்று முடிவு செய்யும், உடனே, 'இல்லை இதனை செய்யாமல் இருப்பதே மேல்' என்று நினைக்கும். இதற்குப் பெயர்தான் சங்கல்ப-விகல்ப 'முடிவு செய்தல் - முடிவை மாற்றுதல்'. இதற்குக் காரணம் நம்முடைய நிலையற்ற பௌதிகத்தனமே ஆகும். ஆனால் நாம் உன்னத உணர்வு நிலையிலிருந்து முடிவு செய்ய முற்படுவோமானால் அந்த நிலையில் 'நான் இதை செய்யட்டுமா வேண்டாமா' என்பது போன்ற இரட்டை தன்மை இல்லை. அங்கு ஒன்றே ஒன்றுதான் உண்டு, 'நான் இதை செய்கிறேன்' ஏனெனில் இது உன்னத உணர்வினால் அறிவுறுத்தப்பட்டது. பகவத்கீதை முழுவதுமே இந்த வாழ்க்கைக் கொள்கையின் அடிப்படையில் தான் உள்ளது."
|