TA/660711 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் இந்த உடலின் தொடர்பாக சிந்திக்கும் பொழுது, அது பௌதிக தளமாகும். உடலை கருத்தில் கொண்டு செய்யும் எந்த காரியமும்... இந்த உடல் என்றால் புலன்கள். உடல் என்றால் புலன்கள். அப்படியென்றால் புலன்நுகர்வுக்காக நாம் செய்வது எதுவாக இருந்தாலும், அது பௌதிகமாகும். மேலும் நாம் பூரணத்துவதின் திருப்திக்காக செய்யும் எந்த காரியமும், அது ஆன்மீகத்தின் தளமாகும். அவ்வளவு தான். எனவே நாம் பாகுபாடு காட்ட வேண்டும், "நாம் புலன்நுகர்வுக்காக வேலை செய்கின்றோமா அல்லது பூரணத்துவதின் திருப்திக்காக வேலை செய்கின்றோமா?" இந்த கலையை நாம் கற்றுக் கொள்ள முடிந்தால், பிறகு நம் வாழ்க்கை ஆன்மீகமாகும். ஆன்மீக வாழ்க்கை என்றால், நாம் செய்துக் கொண்டிருக்கும் செயல்களை, ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் செயல்களை, மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதல்ல, அல்லது நம் உடலின் வடிவம் அசாதாரணமான ஒன்றாக மாறும் என்பதல்ல. அவ்வாறு ஒன்றுமில்லை."
660711 - சொற்பொழிவு BG 04.01 and Review - நியூயார்க்