"இறப்பை வெற்றிக் கொள்ள, அதுதான் முக்கியமான பிரச்சனை... குறைந்தபட்சம் முன்னைய வேத நாகரீக நாட்களில்: அனைவரும், அறிவில் உயர்ந்த நிலையில் இருக்கும் எவரும், அவருடைய பிரதான வேலை எவ்வாறு இறப்பை வெற்றிக் கொள்ளவது என்பதுதான். இப்போது, தற்போதைய தருணத்தில் அந்த கேள்வி, இறப்பை எவ்வாறு வெற்றிக் கொள்ளவது என்பது இரண்டாம் பட்சமாகிவிட்டது. "இறப்பு அங்கு இருக்கட்டும். இறப்பு வராதவரை, நான் அனுபவிக்கிறேன், மேலும் புலன்நுகர்வை மேற்கொள்கிறேன்." தற்போதைய தருணத்தில் அது நாகரிகத்தின் தரநிலையாகிவிட்டது. ஆனால் உண்மையான பிரச்சனை இறப்பை எவ்வாறு வெற்றிக் கொள்ளவது என்பதுதான். அவர்கள் நினைக்கிறார்...விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்: "ஓ, இறப்பு... இறப்பை வெற்றிக் கொள்ள முடியாது. ஒதுக்கி வைத்துவிடுங்கள். ஒதுக்கி வைத்துவிடுங்கள். இப்போது நாம் ஏதாவது தயாரிப்போம், அணுகுண்டு, அப்பொழுதுதான் இறப்பு துரிதப்படுத்தப்படும்." இதுதான் விஞ்ஞானத்தின் முன்னேற்றம். அங்கே இறப்பு இருக்கிறது, மேலும் அந்த பிரச்சனை... முன்பு, மக்கள் எவ்வாறு இறப்பை வெற்றிக் கொள்ளவது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போதைய தருணத்தில் இறப்பை துரிதப்படுத்துவதைப் பற்றி சிந்திக்கிறார்கள், மேலும் அதை அறிவின் முன்னேற்றம் என்று அழைக்கிறார்கள்."
|