"பகவான் சைதன்யரின் அபிப்பிராயத்தின்படி, வேதங்களிலுள்ள கட்டளைகள், யாகங்கள் என்பவையெல்லாம் இந்த யுகத்தில் நிறைவேற்றப்பட சாத்தியமில்லை என்பதால்... அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கடினம். இவ்வெல்லா விழாக்கள், சடங்குகள் என்பவற்றை செய்வதற்கு நிபுணத்துவம் பெற்ற தலைவர் எங்கும் இல்லை. எனவே, இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு எந்த செலவும் இல்லை. கடவுள் நாவைக் கொடுத்துள்ளார், செவியைக் கொடுத்துள்ளார். வெறுமனே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து உச்சாடனம் செய்யுங்கள். அது உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை முழுமைப்படுத்தும்."
|