"தற்போது நாம் பௌதிக ஆடையால் அல்லது பௌதிக புலன்களால் மூடப்பட்டுள்ளதால், ஆன்மீகப் பார்வை அதாவது ஆன்மீக உலகம் அல்லது ஆன்மீகமான எதுவும், நமது பௌதிக புலன்கள் காரணமாக புரிவதில்லை. ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருப்பதை நம்மால் உணர முடியும். அது சாத்தியமே. நாம் ஆன்மீக விஷயங்கள் தொடர்பாக முழுமையாக அறியாமையில் இருந்தாலும் நம்மால் உணர முடியும். உங்களை நீங்களே அமைதியாக பகுப்பாய்வு செய்தால், "நான் யார்? இந்த விரலா? இந்த உடலா? இந்த முடியா?", "இல்லை, நான் இவை எதுவும் அல்ல" என்று மறுப்பீர்கள். எனவே, இவ்வுடலைத் தாண்டி என்ன இருக்கிறதோ, அதுவே ஆன்மிகம்."
|