TA/670122b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த கிருஷ்ண ரூபம் அனைவரது சர்வமங்களத்திற்காக உள்ளது." புவன-மங்கலாய த்யானே ஸ்ம தரஷிதம் த உபாஸகானாம். "தியானத்தின் மூலம் அவதானிப்பவர்கள்..." தியானம் என்றால் கிருஷ்ணர் அல்லது விஷ்ணு மீது மனதை ஒருநிலைப்படுத்துவதாகும். எனக்கு தெரியவில்லை... இப்பொழுதெல்லாம் ஏகப்பட்ட தியானம் செய்பவர்கள் உள்ளனர், அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. தோன்றாத அருவத்தன்மையை சிந்திக்க முயல்கிறார்கள். அது பகவத் கீதையில் கண்டிக்கப்பட்டுள்ளது, க்லேஷோ (அ)திகதரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த-சேதஸாம் (BG 12.5). அருவத்தின் மீது தியானம் செய்ய முயல்பவர்கள், தேவையற்ற சிரமத்தை மேற்கொள்கிறார்கள். தியானம் செய்ய வேண்டுமானால், கிருஷ்ணரின் மீதோ பரமாத்மா மீதோ தியானம் செய்யுங்கள்."
670122 - சொற்பொழிவு CC Madhya 25.31-38 - சான் பிரான்சிஸ்கோ