"ஆன்மா நித்தியமானது, ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே: (ப.கீ. 2.20) 'இந்த உடல் அழிந்தபிறகும், ஆன்மா அழிவதில்லை.' அது தொடரும். தவிர, ஆன்மா மற்றொரு உடலை ஏற்றுக் கொண்டு என்னை மீண்டும் உயிர்பித்து பௌதிக வாழ்க்கைக்கு ஏற்றதாக்குகிறது. இதுவும் பகவதி கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது, யம்ʼ யம்ʼ வாபி ஸ்மரன் பாவம்ʼ த்யஜத்ய் அந்தே கலேவரம் (ப.கீ. 8.6). இறக்கும் தறுவாயில், நம் ஆன்மா தூய்மையாக இருந்தால், பிறகு அடுத்த பிறவி பௌதிகமாக இருக்காது, அடுத்த பிறவி தூய்மையான ஆன்மீக வாழ்க்கையாகும். ஆனால் இறக்கும் தறுவாயில், நம் ஆன்மா தூய்மையாக இல்லையென்றல், நாம் இந்த உடலை விட்டு, மீண்டும் மற்றொரு பௌதிக உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த செயல்முறைதான் இயற்கையின் சட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது."
|