TA/670416b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நோயுற்ற நிலையில் "நான்" எனும் அடையாளப்படுத்தல் வித்தியாசமானது. சில வேளைகளில் வலிப்பு ஏற்பட்டு மறதி ஏற்படும்‌. மூளையில் குழப்பம் ஏற்பட்டு நமது உறவு எல்லாம் மறந்த நிலை ஏற்படலாம். ஆனால் குணமடைந்த பின்னர் "அந்த மயக்கமடைந்த நிலையில் மறதியில் இருந்தேன்." என்று நினைவுபடுத்திக் கொள்வீர்கள். "நான்" என்பது என்றும் இருக்கும். நான் எனும் நினைவு, அதாவது அகங்காரம் தூய்மைப்படுத்தப்பட்ட வேண்டும். அகங்காரம் அழிக்கப்படக் கூடாது. மேலும் அதை கொல்ல முடியாது, ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே (BG 2.20), ஏனென்றால் அது நித்தியமானது. அகங்காரத்தை எப்படி அழிப்பீர்கள்? அது சாத்தியமில்லை. எனவே அகங்காரத்தை தூய்மைபடுத்த வேண்டும். சரியான அலங்காரத்திற்கும் தவறான அதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாடு எப்படி இருக்குமென்றால், அஹம் ப்ரஹ்மாஸ்மி, "நான் பிரம்மன்." இதுவும் அகங்காரம்தான். இது வேதத்தின் படியானது, அதாவது "நான் பிரம்மன். நான் இந்த ஜடம் அன்று," இந்த அகங்காரம் தூய்மைப்படுத்தப்பட்ட அகங்காரம். "நான்" என்பது எப்போதும் இருக்கும். மாயையிலோ மயக்கத்திலோ கனவிலோ ஆரோக்கியமான நிலையிலோ, "நான்" என்பது எப்பொழுதும் இருக்கும்."
670416 - சொற்பொழிவு CC Adi 07.109-114 - நியூயார்க்