TA/680309b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் என்றால் சர்வ வசீகரமானவர், இதுவே கடவுளின் பூரணமான பெயர். கடவுள் சர்வ வசீகரமாக இல்லாவிட்டால், அவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுள், இந்துக்களின் கடவுளாகவோ கிறிஸ்தவர்களின் கடவுளாகவோ யூதர்களின் கடவுளாகவோ முஸ்லிம்களின் கடவுளாகவோ இருக்க முடியாது. கடவுள் எல்லோருக்குமானவர், மேலும் அவர் சர்வ வசீகரமானவர், அவர் பூரணமான செல்வம் உடையவர். பூரணமான அறிவு உடையவர், பூரணமான அழகு உடையவர், பூரணமான துறவு உடையவர், பூரணமான புகழ் உடையவர், பூரணமான பலம் உடையவர். இவ்வாறாக அவர் சர்வ வசீகரமானவர். கடவுளுடன் நமக்கு இருக்கும் உறவை நாம் அறிய வேண்டும். அதுவே பகவத்கீதை உண்மையுருவில் புத்தகத்தின் முதலாவது பாடம். நமது உறவை நாம் புரிந்து கொண்டால், அதன்படி நாம் நடக்க முடியும்."
680309 - Interview - சான் பிரான்சிஸ்கோ