"ப்ரஹ்ம-கர்ம. ப்ரமன் தான் முழுமுதற் கடவுள். ஆகவே நீங்கள் ப்ரஹ்ம-கர்மவில் ஈடுபடவேண்டும், அதுதான் கிருஷ்ண பக்தி. மேலும் உங்கள் தகுதியை வெளிப்படுத்துங்கள், அதாவது நீங்கள் உண்மையானவர், நீங்கள் புலன்களை அடக்கியுள்ளீர்கள், மனதை கட்டுப்படுத்தி, மேலும் எளிமையானவர், சகிப்பு தன்மை மிக்கவர் என்று. எனென்றால் நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவுடன், மாயாவால் வசப்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவரும், உங்களுக்கு எதிரியாக இருப்பார்கள். அதுதான் மாயாவின் தாக்கம். சிலர் குறை கூறுவார்கள். சிலர் இதைச் செய்வார்கள், சிலர் அதை செய்வார்கள், ஆனால் நாம்... நாம் சகித்துக் கொள்ள வேண்டும். இதுதான் இந்த பௌதிக உலகின் நோய். யாராகிலும் ஆன்மீகத்தில் முன்னேறினால், மாயாவின் சேவகர்கள் குறை காண்பார்கள். ஆகையினால் நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும்."
|