TA/680325 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே நான் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்ய வேண்டும் அப்போழுதுதான் உயிர்விடும் நேரத்தில் நான் கிருஷ்ணரை மறக்கமாட்டேன். பிறகு என் வாழ்க்கையில் வெற்றிதான். பகவத் கீதையில் அது கூறப்பட்டுள்ளது யம்ʼ யம்ʼ வாபி ஸ்மரன் பாவம்ʼ த்யஜத்ய் அந்தே கலேவரம் (ப.கீ. 8.6). இறக்கும் நேரத்தில், ஒருவர் எதைப் பற்றி நினைக்கின்றாரோ, அதுவே அவர் அடுத்த பிறவியின் துவக்கம். அதற்கு உதாரணம், அழகாக கொடுக்கப்பட்டுள்ளது, எவ்வாறென்ரால் காற்று ரோஜா பூக்களைத்தழுவி வந்தால் அதன் இனியமனம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காற்று அசுத்தமான இடத்திலிருந்து வந்தால் அந்த துர்நாற்றம் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் மனநிலை சூக்கம உருவத்தை முடிவுசெய்கிறது."
680325 - உரையாடல் - சான் பிரான்சிஸ்கோ