"மூலமான மெழுகுவர்த்தி கிருஷ்ணராவார். விரிவாக்கத்தின் விரிவாக்கம் குறைந்த சக்திவாய்ந்தது என்பதல்ல. மெழுகுவர்த்தியின் சக்தி, முலமாக இருந்தாலும் விரிவாக்கத்தின் விரிவாக்கமாக இருந்தாலும் ஒரேமாதிரியாகதான் இருக்கும். நித்தியானந்தர் சைதன்யாவைவிட குறைந்த சக்திவாய்ந்தவரல்ல, அல்லது அத்வைதர் குறைந்த சக்திவாய்ந்தவர்... இல்லை. எந்த அவதாரமும் விரிவாக்கமும் ஒரே சக்தியை பெற்றுள்ளது, விஷ்ணு-தத்துவம். சக்தியின் ஜட தோற்றம் வேறுபட்டது. எவ்வாறு என்றால் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள், மேலும் ராமரும் முழுமுதற் கடவுள்தான். ஆனால் ஒருவர்தான் முலமானவர். கிருஷ்ணர் முலமானவர், மேலும் ராமர் அவருடைய அவதாரம்."
|