"நம்மிடம் எது இருந்தாலும், அந்த விடயம் கிருஷ்ணரிடமும் உண்டு. ஆனால் கிருஷ்ணரிடம் அது பூரணமாக இருக்கிறது; நமது கட்டுண்ட வாழ்வில் நம்மிடம் அது பூரணமின்றி இருக்கின்றது. நம்மை கிருஷ்ணரிடம் அர்ப்பணித்தால், நமது இத்தகைய எல்லா உந்துதல்களும் பூரணமடையும். நான் மீண்டும் மீண்டும் கொடுத்த அதே உதாரணத்தில், எழுபது மைல் வேகத்தில் கார் ஒன்று ஓடுகிறது; ஒரு சைக்கிள் ஓட்டி அந்த காரை பிடித்துக் கொள்கிறான், அவனிடம் இத்தகைய வேகம் இல்லாவிடினும் அவனும் எழுபது மைல் வேகத்தில் ஓடுகிறான், இதேபோல் நாம் கடவுளின் சிறு துகள்களாக இருந்தாலும், கடவுளின் அல்லது கிருஷ்ணரின் உணர்வில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டால், நாமும் சரிக்கு சமமாக தெய்வீக தளத்தை அடைவோம். இதுவே உத்தி."
|