TA/680402 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே உச்சாடனம் செய்வது தெய்வீகமான சப்த அதிர்வு. சப்தம் அனைத்து படைப்புக்களுக்கும் மூலமாகும். ஆகவே இந்த தெய்வீகமான சப்தம், நீங்கள் அசைத்தலினால், இந்த கிருஷ்ண பக்தியின் தத்துவத்தைப் பற்றி விரைவாக புரிந்துக் கொள்வீர்கள். இதில் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஒருவேளை நீங்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்தால்; நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. ஆனால் இதில் ஏதாகிலும் ஆதாயம் இருந்தால், நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது? நாங்கள் வெறுமனே கைகட்டிக் கொண்டு உங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறோம் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யுங்கள் என்று. நாங்கள் வெறுமனே உங்களை கேட்டுக் கொள்கிறோம், ஏதும் பணம் கேட்கவில்லை அல்லது கஷ்டப்படவோ, அல்லது கல்விமானாக அல்லது வக்கீலாக, பொறியியலராகவோ ஆன பின் எங்களுடம் வரச்சொல்லவில்லை. வெறுமனே முயற்சி செய்து இந்த பதினாறு வார்த்தைகளை உச்சாடனம் செய்யுங்கள், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே."
680402 - சொற்பொழிவு - சான் பிரான்சிஸ்கோ