"ஆக மானிட வாழ்க்கை விலையுயர்ந்த சொத்தை வெறுமனே நாய்களும், பன்றிகளும் போல் வீனாக்குவதிற்கானதல்ல. நமக்கு பொறுப்புள்ளது. ஆத்மா ஒரு உடலில் இருந்து மற்றொன்ருக்கு மாறுகிறது, மேலும் இந்த மனிதப் பிறவி மகிழ்ச்சி நிறைந்த ராதா-கிருஷ்ணரின் தெய்வீகமான தளத்திற்கு செல்ல, நம்மை தயார்படுத்திக் கொள்ள பொறுத்தமானது. நீங்கள் ஆனந்தத்தை தேடிப் போகிறீர்கள், ஆனால் அந்த இன்பத்தை எவ்வாறு அடைவது என்று உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த இன்பத்தை அடைவதற்கான நிபந்தனை, இங்கு இருக்கிறது: தபோ திவ்யம். 'நீங்கள் சில கட்டுப்பாடான தவத்தை மேற்கொள்ள வேண்டும், என் அன்பு புத்திரர்களே', திவ்யம், 'பூரண உண்மையுடன் தெய்வீகமான இன்பத்தை பெறுவதிற்கு'."
|