TA/680504b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே வாழ்க்கையின் இந்த ஜட நிலை நோயுற்ற நிலை. அது நமக்கு தெரியாது. மேலும் நாம் இந்த நோயுற்ற நிலையில் அனுபவிக்க முயற்சி செய்கிறோம். அது எவ்வாறு என்றால் நாம் நோய்யை அதிகமாக தூண்டுகிறோம் - நாம் தொடர வேண்டும். நாம் நோய்யை குணப்படுத்தவில்லை. வைதியர் சில கட்டுப்பாடுகளை அளிப்பது போல், "அன்பு நோயாளி, நீ இவ்வாறு சாப்பிடக் கூடாது. நீ இவ்வாறு அருந்தக் கூடாது. நீ இந்த மாத்திரைகளை உட்கொள்." ஆகவே சில கட்டுப்பாடுகளும் சட்டத்திட்டங்களும் உள்ளன - அதுதான் தபஸ்ய என்று கூறப்படுகிறது. ஆனால் நோயாளி "நான் ஏன் இந்த கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்? எனக்கு விருப்பமானதை நான் சாப்பிடுவேன். நான் விரும்பியதை செய்வேன். நான் சுதந்திரமானவன்," பிறகு அவன் குணமடையமாட்டான். அவன் குணமடையமாட்டான்."
680504 - சொற்பொழிவு SB 05.05.01-3 - பாஸ்டன்