"குறைந்தபட்சம், சட்டதிட்டங்களை உறுதியாகக் கடைபிடித்து பதினாறு சுற்று ஹரே கிருஷ்ண ஜெபத்தை செய்தவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பு துறவு அளிப்பது. பகவானின் சேவையில் முழுமையாக ஈடுபட விரும்பினால், சந்நியாசம் ஏற்றுக் கொள்ளலாம். அன்றொரு நாள் நாம் கலந்துரையாடியது போல், அநாஷ்ரித꞉ கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய꞉, ஸ ஸந்ந்யாஸீ (BG 6.1). நிச்சயமாக, முறைப்படியான சட்டதிட்டங்கள் இருக்கவே செய்கின்றன. உண்மையான வாழ்வு: பகவானின் சேவையில் தன்னுள் ஒருவர் எவ்வளவு நேர்மையாக உள்ளார் என்பதாகும்."
|