"உண்மையான பௌதிக பிரச்சனை இதுதான், ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி. "தாயின் வயிற்றில் எவ்வளவு ஆபத்தான நிலையில் நாம் இருந்தோம்" என்பதை மறந்து விட்டோம். நிச்சயமாக, மருத்துவ விஞ்ஞானத்தின் அல்லது வேறு விஞ்ஞானத்தின் விளக்கங்களிலிருந்து, குழந்தை எப்படி வைக்கப்பட்டுள்ளது, அதில் எவ்வளவு துன்பம் இருக்கிறது என்பதை எல்லாம் அறிய முடியும். புழுக்கள் குழந்தையை கடிக்கும், ஆனால் அதனால் அதை வெளிப்படுத்த முடியாது; அது துன்புறுகிறது. இதேபோல், தாய் ஏதாவது காரமான உணவை உண்டுவிட்டால், அதுவும் அதற்கு துன்பத்தைக் கொடுக்கிறது. தாயின் வயிற்றில் எப்படி குழந்தை துன்புறுகிறது என்பது பற்றிய இந்த விளக்கங்கள் எல்லாம் அதிகாரபூர்வமான வேத சாஸ்திரங்களில் காணப்படுகின்றன."
|