"ஒரு சிறு குழந்தையைப் போல. "சூரியன் வானத்தில் இருக்கின்றது" என்று சிறு குழந்தையொன்றுக்கு கூறினால், குழந்தை கூறும், "சூரியன் எங்கே இருக்கிறது என்று எனக்குக் காட்டுங்கள்". மேலும் யாராவது, "சரி, வாரும், உனக்கு சூரியனைக் காட்டுகிறேன். கூரைக்கு வா. என்னிடம் 'டார்ச்லைட்' இருக்கிறது..." குழந்தை என்னதான் அடம் பிடித்தாலும், இரவில் சூரியனைக் காட்டுவது சாத்தியமில்லை, இதேபோல், கடவுள் இல்லை என்று கூறும் விஞ்ஞானிகள் எனப்படுவோர், குழந்தைகளைப் போன்றவர்கள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அறிவில் முன்னேறிய ஒரு மனிதனைப் போல, சூரியன் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். இரவில் பார்க்க முடியாவிட்டாலும், சூரியன் இருக்கிறது. அவன் அதை உறுதியாக நம்புகிறான். அதேபோல், ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள், கடவுளை ஒவ்வொரு தருணத்திலும் காணமுடியும்."
|