TA/680610b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழு செயன்முறையும் கேட்பதுவே. கல்வியறிவு ஏதும் தேவையில்லை; விஞ்ஞான தகுதிகளோ, இதுவோ அதுவோ ஏதும் தேவையில்லை. தயைகூர்ந்து வெறுமனே இங்கே வந்து, பகவத் கீதை,; ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பீர்களானால், முழுமையாக கற்றவராக, முழுமையாக தன்னை உணர்ந்தவராக ஆவீர்கள். வெறுமனே. ஸ்தானே ஸ்திதா꞉ (SB 10.14.3). சைதன்ய மகாபிரபு இந்த செயன்முறையை பரிந்துரைத்துள்ளார். வாழ்வின் முடிவு என்ன, மனித வாழ்வின் நோக்கம் என்ன, எப்படி பக்குவம் அடைவது என்பவற்றை அறியாத பரிதாபத்திற்குரிய மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிளைகளை திறப்பதற்கு நாம் முயல்கிறோம். இந்த அறிவு, இந்த தகவல்கள் இருக்கின்றன. இவற்றை விநியோகம் செய்ய நாம் முயல்கிறோம். இது கண்டிப்பானதன்று; இது விஞ்ஞான பூர்வமானது."
680610 - சொற்பொழிவு BG 04.05 - மாண்ட்ரீல்