"எனவே கிருஷ்ணர் இங்கு கூறுகிறார், அதாவது யார் ஒருவர் பூரண உண்மையை, அல்லது செயல்பாட்டை அல்லது நோக்கத்தை அல்லது இறைவனின் தோற்றத்தையும் மறைவையும், பகவான் யார், அவருடைய செயல்பாடுகள் என்ன என்று புரிந்துக் கோண்டு... நமக்கு நம் செயல்கள் இருப்பது போல், நமக்கு விதந்தேற்றம் இருக்கிறது. அதேபோல், பகவானுக்கு அவருடைய விதந்தேற்றம் இருக்கிறது, அவருடைய செயல்கள், அவருடைய உருவம், அனைத்தும் இருக்கிறது. அது என்ன என்பதை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். அது திவ்யம் என்று கூறப்படுகிறது. திவ்யம் என்றால் இந்த ஜட பொருள் போல் அல்ல. அது ஆன்மீகமானது. ஆகவே அதுதான் ஆன்மீக விஞ்ஞானம்."
|