"பல வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பகவத் கீதை அங்கிருக்கிறது. உங்களுடைய அனைத்து காரணங்கள், உங்களுடைய அனைத்து விவாதங்கள், உங்களுடைய அனைத்து புலன்களை கொண்டு பகவான் யார் என்று நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். இது பிடிவாதமுள்ள கொள்கை அல்ல. இது நியாயமான தத்துவம். துரதிஷ்டவசமாக பகவான் மடிந்துவிட்டார் என்று முடிவெடுத்துவிட்டனர். பகவான் எவ்வாறு இறப்பார்? இது மற்றொரு போக்கிரித்தனம். நீங்கள் இறக்கவில்லை; பகவான் எவ்வாறு இறப்பார்? ஆகையால் பகவான் இறந்துவிட்டார் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் என்றும் இருப்பார், சூரியன் எப்பொழுதும் தோன்றுவது போல. போக்கிரிகள்தான் சூரியன் இல்லை என்று கூறுவார்கள். சூரியன் இருக்கிறது. உங்கள் பார்வையைவிட்டு விலகியுள்ளது, அவ்வளவுதான். அதேபோல், "பகவானை நம்மால் பார்க்க முடியவில்லை, ஆகையினால் பகவான் இறந்துவிட்டார்," இது போக்கிரித்தனம். இது சரியான முடிவு அல்ல."
|