"தொண்டாற்றுவதே ஒவ்வொரு உயிர்வாழியினதும் இயற்கை சுபாவம். அதுவே இயற்கை சுபாவம். இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் நாம் எவரும் கூறமுடியாது "நான் ஒரு தொண்டன் அன்று." நாம் ஒவ்வொருவரும் தொண்டர்கள். மிக உயர்ந்த நபர் வரை, உங்கள் பிரதம மந்திரியோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ, எல்லோரும் தொண்டர்கள். யாராலும் கூற முடியாது "நான் தொண்டன் அன்று." அதனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகவோ இந்துவாகவோ இஸ்லாமியராகவோ இருந்தாலும் தொண்டாற்ற வேண்டும். ஒருவர் கிறிஸ்தவராக அல்லது இந்துவாக இருப்பதால் அவர் தொண்டாற்ற வேண்டியதில்லை என்பது இல்லை."
|