"இப்போது உங்களது மதத்தை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் இந்துவாகவோ முஸ்லிமாகவோ பௌத்தராகவோ இருக்கலாம்-உங்களுக்கு விருப்பமான எதுவானாலும் சரி-ஸ்ரீமத் பாகவதம் உங்களைத் தடுக்கவில்லை, ஆனால் மதத்தின் நோக்கத்தைப் பற்றிய குறிப்பை அது கொடுக்கிறது. மதத்தின் நோக்கம் கடவுளிடம் அன்பை வளர்த்துக் கொள்வதாகும். அதுவே உண்மையான மதம். இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி (BG 4.7). மக்களுக்கு கடவுளிடம் உள்ள அன்பில் நலிவு ஏற்பட்டவுடன்... அதன் அர்த்தம் மக்கள் கிட்டத்தட்ட மறந்து போகும் போது. ஏனென்றால் குறைந்தபட்சம் சிலராவது கடவுள் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துள்ளனர். ஆனால் பொதுவாக இந்த யுகத்தில் அவர்கள் மறக்கக் கூடியவர்கள்."
|