"இயற்கையின் சட்டத்தை மீறமுடியாது. அது உங்கள் மீது அமுல்படுத்தப்படும். குளிர் காலம் எனும் இயற்கையின் சட்டத்தை போல. உங்களால் அதை மாற்ற முடியாது. அது உங்கள் மீது அமல்படுத்தப்படும். கோடை காலம் எனும் இயற்கையின் சட்டம், அதை உங்களால் மாற்ற முடியாது, எதையுமே மாற்ற முடியாது. சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றது, இது இயற்கையின் சட்டம் அல்லது கடவுளின் சட்டம். அதை உங்களால் மாற்ற முடியாது, எதையுமே மாற்ற முடியாது. இயற்கையின் சட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையின் சட்டங்களை புரிந்துகொள்வது கிருஷ்ண உணர்வாகும். இயற்கையின் சட்டங்களைப் பற்றி பேசியவுடன், சட்டங்களை உருவாக்குபவர் ஒருவர் இருப்பதை நாம் ஏற்றாக வேண்டும். இயற்கையின் சட்டங்கள் தானாக உருவாக முடியாது. அதன் பின்புலத்தில் ஏதேனும் அதிகாரி இருக்க வேண்டும். அதனால் பகவத்கீதை பத்தாவது அத்தியாயத்தில் கூறுகிறது, மயாத்யக்ஷேண ப்ரக்ருதி꞉ ஸூயதே ஸ-சராசரம் (BG 9.10). "எனது வழிக்காட்டல், மேற்பார்வையின் கீழ் பௌதிக சட்டங்கள் செயல்படுகின்றன."
|