"பண்புள்ள மாதர்களே மனிதர்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மீண்டும் புது வலிமை பெறுகிறது. தற்சமயம், கருப்பொருளுடன் இருந்த நீண்ட தொடர்பினால், ஆத்மா தூய்மையற்றிருந்தது, எவ்வாறு என்றால், மழை நீர் வானிலிருந்து விழும்பொழுது, நீர் அழுக்கற்றதாக, வடிகட்டிய நீராக, தூய்மையாக இருக்கும், ஆனால் பூமியில் விழுந்ததும், பல தூய்மையற்ற பொருளுடன் கலந்துவிடும். நீர் விழும்போழுது, அது உப்பு கரிக்காது, ஆனால் கருப்பொருளுடன், அல்லது பூமியில் விழுந்ததும் உப்பு கரிப்பதுடன், ருசியற்றதாக இருக்கும். அதேபோல், ஆரம்பத்தில், ஆன்மீக ஆத்மாவாக, நம் ஆன்மீக உணர்வு தூய்மையாக இருந்தது, ஆனால் கருப்பொருளுடன் கொண்ட தொடர்பால் தற்சமயம், நம் மனம் அசுத்தமடைந்துவிட்டது."
|