"இந்த தருணத்தில், விசேஷமாக இந்த யுகத்தில், கடவுளுடன் நாம் கொண்டுள்ள நித்திய உறவை பற்றிய மறதி மிகத் தீவிரமானது. ஹரே கிருஷ்ணா எனும் திவ்ய ஒலியை உச்சாடனம் செய்வதன் மூலம் நமது முதல் தவணையாக நமது இதயம் அல்லது மனம் எல்லா மாசுக்களில் இருந்தும் தூய்மையடைகிறது. இதுவொன்றும் தத்துவார்த்த முன்மொழிவு அல்ல. இது உண்மை. இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து உச்சாடனம் செய்தால், அது ஒன்றும் கடினமில்லை. அது சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்பட்டாலும், எல்லோராலும் அதை உச்சாடனம் செய்ய முடியும், இந்தக் கூட்டத்தில் நாம் உச்சாடனம் செய்ய ஆரம்பித்தவுடன் நீங்களும் இணைந்து கொண்டது போல."
|