"நான் கவலைகள் நிறைந்தவனாக இருக்கிறேன், காரணம் தேகாபிமான வாழ்வு. ஒரு விலையுயர்ந்த மோட்டார் காரை வாங்கியவனைப் போல, அவன் காரை வீதியில் ஓட்டுகிறான். கார் விபத்துக்குள்ளாகாமல், சேதமடையாமல் இருக்க வேண்டுமென அவன் மிகக் கவனமாக இருக்கிறான். ஏகப்பட்ட கவலை. ஆனால் பாதையில் நடந்து செல்லும் ஒருவனுக்கு, இவ்வாறான கவலைகள் ஏதும் இல்லை. காரில் உள்ள மனிதனுக்கு ஏன் இவ்வளவு கவலை. ஏனென்றால் அவன் தன்னை காருடன் அடையாளப்படுத்துகிறான். காருக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு சேதமடைந்தால், அவன் நினைக்கிறான், "நான் தீர்ந்தேன். ஓ, என் கார் முடிந்தது." அவன் காரில் இருந்து வேறுபட்டவனாக இருந்தாலும், தவறான அடையாளப்படுத்தலினால், அவன் இவ்வாறு நினைக்கிறான். இதேபோல், நாம் இந்த உடலோடு அடையாளப்பட்டதால்தான், வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள். எனவே வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பினால், நான் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்."
|