"இந்த உடலின் மனிததோற்றம், மிகவும் அறிதாகப் பெறப்படுகிறது. இது தவறாக உபயோகிக்கப்படக் கூடாது. அதுதான் அறிவின் முதலிடம். ஆனால் மக்கள் அந்த முறையில் கற்பிக்கப்படவில்லை. அவர்கள் புலன் மகிழ்ச்சியில் செல்ல உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்: 'அனுபவி, அனுபவி, அனுபவி'. சில போக்கிரிகள் வருகிறார்கள், அவர்களும் கூறுவார்கள், 'சரி, போங்கள், அனுபவியுங்கள். வெறுமனே பதினைந்து நிமடத்திற்கு தியானம் செய்யுங்கள்'. ஆனால் உண்மையில், இந்த உடல் புலன் மகிழ்ச்சியை தூண்டுவதற்காக அல்ல. நமக்கு புலன் மகிழ்ச்சி தேவை, ஏனெனில் அது உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால், உடலின் தேவைகள் - உண்பது, தூக்கம், உடலுறவு, மேலும் தற்காத்தல் - இவை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இது தூண்டப்படக் கூடாது. ஆகையினால் மனித வாழ்க்கையில், தபஸ்ய. தபஸ்ய என்றால் மிக எளிமையான, பிராயச்சித்தம், உறுதி. இதுதான் அனைத்து வேதத்திலும் கற்பிக்கப்படுகிறது."
|