TA/680616b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு அழகான மேல் அங்கி இருக்கிறது, மேலும் அந்த அங்கியினுள் நீங்கள் இருக்கிறீர்கள், தற்சமயம் நாம் அக்கறை கொள்கிறோம். இப்போழுது, நீங்கள் மேல் அங்கியையும் சட்டையையும் நன்றாக வைத்துக் கொண்டு, மேலும் உங்களை ஒரு மனிதனாக கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், எத்தனை காலத்திற்கு உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும்? உங்களிடம் அழகான மேல் அங்கி இருந்தும் நீங்கள் வசதியின்மையை உணர்வீர்கள். அதேபோல், இந்த உடல், இந்த தூல உடல், நம் மேல் அங்கி போன்றது. நான் உண்மையில் ஆன்மீக பொறி. இந்த உடல், தூல வெளிபோர்வை, மேலும் உள்போர்வையும் உள்ளது: மனம், அறிவும், தான் என்னும் எண்ணமும். அதுதான் என் சட்டை. ஆக சட்டையும் மேல் அங்கியும். மேலும் சட்டைக்கும் மேல் அங்கிக்கும் உள்ளே, நான் உண்மையில் அங்கிருக்கிறேன்.
தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே
கௌமாரம்ʼ யௌவனம்ʼ ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
திரஸ் தத்ர ந முஹ்யதி :(ப.கீ 2.13)"

680616 - சொற்பொழிவு SB 07.06.03 - மாண்ட்ரீல்