"ஆன்மீக லோலகத்துள், கடவுளின் திருநாட்டினுள் எப்படி ஒருவர் சுலபமாக நுழைய முடியும் என்பதை கிருஷ்ணர் விளக்குகிறார். எளிமையான சூத்திரம் என்னவெனில், இறைவனின் தோற்றம், மறைவு, செயல்கள் என்பவற்றை திவ்யம் என்று பூரண உண்மையின் பக்குவமான அறிவுடன் புரிந்து கொள்பவர் எவரும், இந்த புரிதலினாலேயே ஆன்மீக ராஜ்யத்தினுள் உடனடியாக நுழைய முடியும். நமது தற்போதைய புலன்களின் உதவியுடன் பூரண உண்மையை அறிவது சாத்தியமில்லை. அதுவும் இன்னொரு உண்மையே. காரணம் தற்போதைய தருணத்தில் ஜடத்தால் பாதிக்கப்பட்ட; ஜடப் புலன்கள் அல்ல. நமது புலன்கள் ஆதியில் ஆன்மீகமானவையாக இருந்தன, ஆனால் அது ஜட மாசினால் சூழப்பட்டுள்ளது. அதனால், செயல்முறையானது, பௌதிக வாழ்வின் திரையை தூய்மைப்படுத்துவதாகும். அதுவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது- வெறுமனே சேவை மனப்பான்மை மூலம்."
|