"கிருஷ்ணர் எல்லோரது இதயத்திலும் வீற்றிருக்கிறார். நான் சந்நியாசி என்பதால் கிருஷ்ணர் எனது இதயத்தில் இருக்கிறார் என்று இல்லை. இல்லை. கிருஷ்ணர் எல்லோரது இதயத்திலும் வீற்றிருக்கிறார். ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி (BG 18.61). அவர் உணர்வுள்ளவர். அவர் பூரண அறிவுடையவர். கிருஷ்ணரை புரிந்துகொள்ள முயலும், இந்த ஒரு செயலே, கிருஷ்ணரை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. ஏனென்றால் நீங்கள் இங்கு தயவுடன் வந்துள்ளீர்கள், கிருஷ்ணர் உங்களுள் இருக்கின்றார். நீங்கள் பொறுமையாக கேட்பதால், அவர் ஏற்கனவே திருப்தியடைந்து விட்டார். உங்கள் மீது அவர் ஏற்கனவே திருப்தியடைந்து விட்டார். மேலும் அதன் விளைவு என்னவெனில், ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா꞉ க்ருஷ்ண꞉ புண்ய-ஷ்ரவண-கீர்தன꞉, ஹ்ருத்யந்த꞉-ஸ்தோ ஹ்யபத்ராணி. அபத்ர என்றால் எமது இதயத்தில் நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்து சேர்ந்துள்ள மோசமான விடயங்கள்."
|