"நமது கடந்த கால வாழ்க்கையை பற்றி ஏகப்பட்ட விடயங்களை நாம் நினைவில் கொள்வது போல. அது பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி இந்த தொலைக்காட்சியை பெருகிறீர்கள்? ஏனென்றால் அது காற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது அப்படியே கடத்தப்படுகிறது. எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது உடல் நிலையிலும் கூட நாம் சீர்கெட்டு போய்விட்டோம், அதனால் பதிவு செய்யப்பட்டவையைக் கூட வழங்கமுடியாது உள்ளோம். நம்மை நாமே மந்தமாக, மேலும் மந்தமாக, மேலும் மேலும் மந்தமாக ஆக்கிக் கொள்கின்றோம். சார் ஜார்ஜ் பெர்னாட் ஷாவும் கூறியுள்ளார், "நீங்கள் என்ன உண்கிறீர்களோ, அதுதான் நீங்கள்." உணவு பழக்கத்தால் நமது மூளையை நாமே மந்தமாக்குகின்றோம். எனவே, நல்ல உணவு, நல்ல பேச்சு, நல்ல சிந்தனை, நல்ல நடத்தை என்பவை தேவையாக உள்ளன. பின்னர் நமது மூளை கூர்மையாகிவிடும். இதற்கு பயிற்சி அவசியம்."
|