"கிழக்கு திசைதான் சூரியனின் தாய் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனென்றால் சூரியன் கிழக்கில் உதயமாகிறது, எனவே நீங்கள சரிபார்க்காது கிழக்கு திசைதான் சூரியனின் தாய் என்று ஏற்றுக் கொள்ளலாம். அதேபோல், கிருஷ்ணரும் அவ்வாறே தோன்றினார், ஆனால் அதற்காக அவர் பிறப்பெடுத்தார் என்று அர்த்தமல்ல. இது பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது: ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ யோ ஜானாதி தத்த்வத꞉. 'உண்மையிலேயே நான் எவ்வாறு பிறந்தேன், எவ்வாறு செயல் புரிகிறேன், நான் எத்தகைய திவ்வியமானவன் என்று புரிந்துக் கொண்ட யாரேனும்...' வெறுமனே இம்மூன்று விஷயங்களை தெரிந்துக் கொள்வதனால் - கிருஷ்ணர் எவ்வாறு பிறந்தார், எவ்வாறு செயல் புரிகிறார் மேலும் அவருடைய உண்மையான நிலைப்பாடு என்ன - அதன் முடிவு யாதெனில் த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய: (ப.கீ 4.9) 'என் அன்பு அர்ஜுனா, வெறுமனே இந்த மூன்று விஷயங்களை தெரிந்துக் கொள்வதனால், ஒருவன் தன் ஜட உடலைவிட்டு பிரியும் பொழுது அவன் என்னிடம் வருவான்'. புனர் ஜன்ம நைதி: 'அவன் மீண்டும் பிறவி எடுக்கமாட்டான்'. அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் கிருஷ்ணரின் பிறப்பைப் பற்றி புரிந்துக் கொண்டால், பிறகு நீங்கள் மீண்டும் பிறப்பதை நிறுத்துவிடலாம். நீங்கள் பிறப்பு மேலும் இறப்பிலிருந்து விடுதலை பெறுவீர்கள். எனவே கிருஷ்ணர் எவ்வாறு பிறப்பெடுத்தார் என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்."
|